உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிக்கன் நெக் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா!

சிக்கன் நெக் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிலிகுரி வழித்தடத்தை பாதுகாக்கும் வகையில், மூன்று இடங்களில் புதிய ராணுவ முகாம்களை இந்தியா நிறுவியுள்ளது.வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற முதலில் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் உளவு அமைப்பு, பயங்கரவாத அமைப்பினரும், வங்கதேசத்தில் புதிய தளம் அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இத்தகைய சூழலில், இந்தியா கிழக்கு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இந்தியா - வங்கதேசம் இடையே மொத்தம் 4,096 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லை பகுதி விரிந்துள்ளது. மேற்கு வங்கத்துடன் மட்டும் 2,217 கிலோமீட்டர் எல்லையை வங்கதேசம் கொண்டுள்ளது.இதில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த 'சிக்கன் நெக்' பகுதியும் அமைந்துள்ளது. அதாவது நம் நாட்டின் பிற பகுதிகளுடன் வடகிழக்கு மாநிலங்களை இணைப்பது இந்த 'சிக்கன் நெக்' பகுதியாகும். இதையொட்டி, நேபாளம், பூடான், வங்கதேசம், சீனா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இதனால் இந்த 22 கி.மீ அகலம் கொண்ட சிக்கன் நெக் அல்லது சிலிகுரி வழித்தடம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. வரைபடத்தில் இந்த இடத்தை பார்த்தால் கோழியின் கழுத்து போல் இருக்கும். இதுவே, 'சிக்கன் நெக்' என்ற பெயர் நிலைப்பதற்கு காரணமானது.சீனாவுடன் உரசல் இருக்கும் நிலையில், வங்கதேசத்துடனும் உறவுகள் சீர்கெட்டதால் உஷாரான மத்திய அரசு, சிலிகுரி வழித்தடத்தை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது.அதன்படி வங்கதேச எல்லையில் 3 புதிய ராணுவ முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. பமுனி (துப்ரிக்கு அருகில்), கிஷன்கஞ்ச் மற்றும் சோப்ரா ஆகிய இடங்களில், இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில், இந்த முகாம்கள் அதிநவீன ஆயுதங்களை கொண்ட படையினருடன் நிறுவப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Arjun
நவ 09, 2025 16:30

முட்டாள்தனமான பதிவு , அவர்கள் எல்லையை இரவு பகலாக பாதுகாப்பதனால் நீங்கள் இங்கே நிம்மதியாக உறங்க முடிகிறது அதைநினைவில் கொள்ளவும் . அதில்லாமல் அங்குள்ள மாநில அரசு மத்திய படைகளுக்கு அதரவு கொடுப்பதில்லை . ஓட்டு அரசியல். இவர் என்னவோ எல்லையில் காவல் காப்பதுபோல பதிவு.


KOVAIKARAN
நவ 09, 2025 13:23

ஆபரேஷன் சிந்தூர் போல ஒரு சிவப்பு சிந்தூர் என்று பெயரிட்டு பங்களாதேசத்திலுள்ள ISI மற்றும் அவர்களுடன் சேர்ந்து நமது இந்திய நாட்டிற்கு எதிராக சாதித்த திட்டம் தீட்டுபவர்களை ஒரே இரவில் போட்டுத்தள்ளவேண்டும்.


Rathna
நவ 09, 2025 12:30

தேச விரோத சக்திகள் வங்காளத்தை ஆட்சி செய்வதால் நாட்டிற்கு மிக பெரிய பாதுகாப்பு குறைவு ஏற்பட்டு உள்ளது. பங்களாதேஷ் உடன் உள்ள எல்லையை பாதுகாக்க ஒரு சட்டத்தை கொண்டு வந்து வங்காள எல்லையை மூட மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள தேச விரோத அமைப்பை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும். அதேபோல உச்ச நீதி மன்றம் இதை வேடிக்கை பார்க்காமல் தேவையான ஆர்டரை பிறப்பித்து, வங்காளத்தை வழிக்கு வர செய்ய வேண்டும். வங்காள எல்லையை மூடாமல் இருப்பது மத்திய அரசின் மிக பெரிய தோல்வியாகவே வரலாற்றில் கருதப்படும். பங்களாதேஷில் பாக்கிஸ்தான் ISI ஏற்கனவே தனது மிக பெரிய அலுவலகத்தை அமைத்து உள்ளது.


Kasimani Baskaran
நவ 09, 2025 11:19

போகும் பொழுது இந்தியாவை துண்டாடிவிட்டு செல்ல பெரிய திட்டம். அன்று ஆரம்பித்த பிரச்சினை இன்றும் தொடர்கிறது.


SENTHIL NATHAN
நவ 09, 2025 11:18

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி முழுவதும் ராணுவ மயமாக்க பட வேண்டும். எல்லை பாதுகாப்பு படையினரில் பலர் வங்க தேசத்தவரை இந்தியாவில் அணுமதிக்கிறார்கள். அவர்களை தண்டிக்க வேண்டும். இவர்கள் தான் நாட்டில் வங்கதேசத்தவர் ரூஹூங்யாக்கள் அதிகமாக காரணம். ஆனால் இந்த எல்லை பாதுகாப்பு படையினருக்கு எந்த பொருப்புணர்வும் இல்லை. மாலையில் மது குடித்து விட்டு பாதுகாப்பில் கோட்டை விடுகின்றனர்


Sri
நவ 09, 2025 11:06

India should go offensive against these forces. No more defensive strategy.


R. SUKUMAR CHEZHIAN
நவ 09, 2025 10:55

சீனா ஆக்கிரமிப்பு திபெத் பகுதியில் நம் பாதுகாப்பை இன்னும் பலபடுத்த வேண்டும். திபெத் சுதந்திரம் அடையும் வரை நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், வங்கதேச எல்லையில் சமூக விரோதிகள் ஊடுருவல் மிக பெரிய ஆபத்து அங்கு எல்லை தாண்டும் வங்கதேச மற்றும் ரோகிங்யா தீயசக்திகளை சுட்டு தல்லவேண்டும்.


RAMESH KUMAR R V
நவ 09, 2025 10:53

தற்காப்பு முக்கியம். இவர்கள் இந்தியாவின் வளர்ச்சியை முடக்க பார்க்கிறார்கள்.