உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் பாதையில் சென்றால் இந்தியா தான் நம்பர்-1; யாரும் தடுக்க முடியாது: கெஜ்ரிவால்

ராமர் பாதையில் சென்றால் இந்தியா தான் நம்பர்-1; யாரும் தடுக்க முடியாது: கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' ராமரின் பாதையில் நமது தேசம் சென்றால், இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது'' என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஜன.,22ம் தேதி நடந்த பிராண பிரதிஷ்டை நிகழ்வானது, உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ராமர் ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டியதில்லை. ஆனால் இன்று நம் சமூகம் அந்த அடிப்படையில் பிளவுபட்டுள்ளது.

அயோத்திக்கு பயணம்

அனைவருக்கும் நல்ல கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி 'ராமராஜ்ஜியம்' உத்வேகத்துடன் டில்லி அரசு செயல்பட்டு வருகிறது. முதியோர்கள் 12 புனித யாத்திரை தலங்களுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகின்றனர். இதுவரை 83,000 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அயோத்திக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். முடிந்தவரை அவர்களை அயோத்திக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்போம்.

நம்பர் 1

டில்லியில் இருந்து அயோத்திக்கு செல்லும் பக்தர்களின் பயணத்திற்கு நிதியுதவி வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தை உதவிகளையும் செய்வோம். மிகுந்த நேர்மையுடன், மக்களின் நலனுக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். ராமரின் பாதையில் நமது தேசம் சென்றால், இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

நரேந்திர பாரதி
ஜன 26, 2024 03:03

அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்...ஆமா, எது ராமர் பாதை?? இந்து கோவில்களின் வருமானத்தை வக்ப் போர்டுக்கும், தேவாலய சங்கத்திற்கும் பகிர்ந்தளிப்பதா?? ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் எங்கள் காவியத் தலைவன் ராமரைப் பற்றி பேச கிஞ்சித்தும் அருகதை கிடையாது


Ramesh Sargam
ஜன 26, 2024 00:16

அண்ணனுக்கு என்ன ராமர் மீது திடீரென்று அளவுகடந்த பாசம், பக்தி?


VENKATASUBRAMANIAN
ஜன 25, 2024 21:26

தேர்தல் படுத்தும் பாடு


Godfather_Senior
ஜன 25, 2024 19:09

அட ராமா இப்படியும் ஒரு துஷ்டர் கூட்டம் உன் பெயரை சொல்லி ஒட்டு கேட்க கிளம்பிவிட்டதே கெஜ்ரிவால் , முதலில் ராமர் பேரை சொல்லியபடியே இப்பவே E. D. ஆபீசுக்கு போய் பதில் சொல்லிவிட்டு வாய்யா நெம்பர் ஒன் அயோக்கியசிகாமணி கெஜ்ரிவால் தான்


mrsethuraman
ஜன 25, 2024 17:26

பாவம் ராமர் கோவில் திறப்பு விழாவை பார்த்து இந்தியா கூட்டணியில் நிறையே பேர்க்கு காய்ச்சலே வந்திருக்கும் .


Veeraputhiran Balasubramoniam
ஜன 25, 2024 16:36

அது தானே.. ராமர் பாதை யும் மோடி பாதையும் ரெண்டுமே ஒண்ணூ தா


Susil Kumar Thiruneelakandan
ஜன 25, 2024 16:11

டெல்லியில் தேர்தலோ ?


KavikumarRam
ஜன 25, 2024 14:17

ராமர் பெயரை சொல்லிட்டு இந்தா வந்துட்டான்ல ஒட்டு பிச்சை எடுக்க ஊழல் பெருச்சாளி.


duruvasar
ஜன 25, 2024 14:00

நடிகர் திலகம் இல்லாத குறையே தெரியவில்லை. அது சரி இப்படி பேசுவதால் தமிழ்நாட்டில் புள்ளி கூட்டணி சார்பாக பொதுகூட்டத்தில் பேசினால் திமுக வின் சிறுபான்மையினர் ஓட்டுகளில் ஓட்டை விழுந்துவிடும்


sankar
ஜன 25, 2024 13:48

படுத்தே விட்டானையா


மேலும் செய்திகள்