உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன

இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இந்தியாவும், நியூசிலாந்தும் அறிவித்துள்ளன. இரு நாட்டு பிரதமர்களும் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடி, இதை உறுதி செய்தனர்.இதையடுத்து, அடுத்த மூன்று மாதங்களில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பு சரக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் 100 சதவீத ஏற்றுமதிகளுக்கும் நியூசிலாந்து சுங்க வரி விலக்கு வழங்க முன்வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 1.80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொள்ள உறுதி அளித்துள்ளது.இதேபோல, நியூசிலாந்தின் 95 சதவீத ஏற்றுமதிகளுக்கு, சுங்க வரி விலக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

தற்போதைய வரிவிதிப்பு

* இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்தில் சராசரி சுங்க வரி: 2.30%* நியூசிலாந்து பொருட்களுக்கு இந்தியாவில் சராசரி சுங்க வரி: 17.80% கடந்து வந்த பாதை

2025

மார்ச் 16 நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்தியா வந்திருந்தபோது, வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுகள் அதிகாரப் பூர்வமாகத் துவங்கப்பட்டன மே 5 - 9 முதல் சுற்றுப் பேச்சு டில்லியில் நடைபெற்றது ஜூலை 14 - 25 இரண்டாம் சுற்றுப் பேச்சு மீண்டும் டில்லியில் செப்டம்பர் 15 - 19 மூன்றாம் சுற்றுப் பேச்சு நியூசிலாந்தின் குயின்ஸ் டவுன் நகரில் நடைபெற்றது அக்டோபர் 13 - 17 டில்லியில் இடைக்காலச் சுற்றுப் பேச்சு நடத்தப்பட்டது நவம்பர் 3 - 7 நான்காம் சுற்றுப் பேச்சு, நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்றது டிசம்பர் 22 பிரதமர் நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் தொலைபேசியில் உரையாடி, பேச்சுகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அறிவித்தனர் 2026 மார்ச் மாதத்துக்கு முன் ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இரு நாடுகளின் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்ததும், ஜூன் மாதத்துக்கு பின் ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வரும் இருதரப்பு வர்த்தகம் 2024 - 25: ரூ. 21,600 கோடி 2029 - 30: ரூ. 45,000 கோடி இரு தரப்பு சரக்கு வர்த்தகம் 2024 - 25: ரூ. 11,700 கோடி

கூடுதல் பயன்

* 5,000 தொழில் நிபுணர்களுக்கு தற்காலிக விசா வழங்கவும்; 1,000 பணியாளர்களுக்கு விடுமுறை கால விசா வழங்கவும் நியூசிலாந்து முடிவு* ஆயுஷ் மற்றும் யோகா பயிற்றுனர்கள், சமையல் நிபுணர்கள் மற்றும் இசை ஆசிரியர்களுக்கு இந்த தொழில் நிபுணர் விசா பொருந்தும்* தகவல் தொழில்நுட்பம், கல்வி, நிதி சேவைகள், சுற்றுலா துறைகளில் அன்னிய நேரடி முதலீடு

முக்கிய அம்சங்கள்

* நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், காய்கறிகள், சர்க்கரை, செம்பு, அலுமினியம் பொருட்களுக்கு வரி விலக்கு வழங்கப்படவில்லை* இந்த ஒப்பந்தம் வெறும் ஒன்பதே மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடு ஒன்றோடு இந்தியா இவ்வளவு குறுகிய காலத்தில் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.- நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramaraj P
டிச 23, 2025 15:56

இந்தியாவிற்கு உலக நாடுகள் பலவும் பால் மற்றும் பால் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. பாலுக்கு 60-68% வரி.பால் பொருட்களுக்கு 30-40% வரி. நியூசிலாந்துக்கு இந்த பொருட்களுக்கு வரி விலக்கு இல்லை.


vivek
டிச 23, 2025 08:39

only sankar is worried about India...


SANKAR
டிச 23, 2025 07:16

after this agreement comes into force what will be the trade balance between two countries? favourable to them or is? finally india agreed to buy milk and milk products from another country?!


SANKAR
டிச 23, 2025 07:33

currently a 5 billion dollar surplus for us is there.will it be maintained or increased under new agreement?


vivek
டிச 23, 2025 08:40

sankar ...do you know about economics or just comment for two hundred rupeees


duruvasar
டிச 23, 2025 09:20

If you are a student and keen to know the answers for your questions you can always browse the concerned site of the both the governments and get d your knowledge. If your queries are meare comments on the issue no one is going to look at it seriously. And give you the answer. Try to read Economic times, or Money Control etc,


Barakat Ali
டிச 23, 2025 09:28

In any trade agreement whether between countries or individuals or corporates one cannot say who get benefited more. Trade balance is not the key. But the necessities, requirements and cost effectiveness are.


Indian
டிச 23, 2025 14:20

Read the agreement, find a clause which is wrong and bring it here.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை