உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிட்டனில் எமர்ஜென்ஸி படத்தை திரையிட தடையா: இந்தியா எதிர்ப்பு

பிரிட்டனில் எமர்ஜென்ஸி படத்தை திரையிட தடையா: இந்தியா எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்த ' எமர்ஜென்ஸி' திரைப்படத்தை பிரிட்டனில் திரையிடுவதற்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் இடையூறு செய்வதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்த எமர்ஜென்சி படம் கடந்த சில நாட்களுக்கு வெளியானது. பிரிட்டனில் பர்மிங்ஹாம், லண்டன் மேற்கு உள்ளிட்ட பல நகரங்களில், இந்த திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்ட திரையரங்குகளுக்குள் முகமூடி அணிந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தினர். சீக்கியர்களுக்கு எதிரான கருத்துகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து திரைப்படம் திரையிடப்படுவது தடைபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக டில்லியில் நிருபர்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: திரைப்படத்திற்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் இடையூறு ஏற்படுத்துவது குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. வன்முறை நிறைந்த போராட்டம் மற்றும் அதனை இந்திய எதிர்ப்பு சக்திகள் தூண்டிவிடுவது குறித்து பிரிட்டன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்தை வெளிப்படுத்துவதை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அமல்படுத்தக்கூடாது. திரைப்படத்தை தடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.இதற்கு காரணமானவர்கள் மீது பிரிட்டன் நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது. இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து லண்டனில் உள்ள நமது தூதரகம் அவர்களுடன் தொடர்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

rajesh14873in@yahoo.co.in
ஜன 25, 2025 07:05

எப்போ இலங்கை முள்ளி வாய்க்கால் பற்றிய படம் வரும் . அதற்கு உடந்தையாக இருந்த இந்தியா அரசியல் தலைவர்கள் முகம் உலகிற்கு காட்டப்படும் .


prasath
ஜன 25, 2025 01:51

இவரை சிறந்த பிரதமர் என்பதை ஏற்கமாட்டேன். ஆனால் இவரின் ஒரு சில அரசியல் முடிவுகளை வரவேற்பேன். இவர் செய்த பல தவறுகள் ஏற்க முடியாதவை. பதவி ஆசை, அரசியல் தலைமைக்காக பல, பல பெரும் தவறான முடிவுகளை தெரிந்தே செய்தார். அலகாபாத் கோர்ட் இவரின் தேர்தல் தில்லு முள்ளு வெற்றியை செல்லாது என்பதை ஜீரணிக்க முடியாமல் எமெர்ஜென்சி கொண்டுவந்தது, தன் மகன் சஞ்சய் காந்தியை கட்சியில் வளர்த்து, அவரின் அராஜகத்தை கண்டு கொள்ளாமல் விட்டது, காலிஸ்தான் தீவிரவாத்தை ஆதரித்து பிந்த்ரன்வாலேவை வளர்த்து, அதனால் பொற்கோவிலை களங்க படுத்தியது, காமராஜரால் தலைமைக்கு வந்தது, பதவி வந்தவுடன் அவரை who is Kaamaraj என்று அவமான படுத்தியது, பதவியில் இருந்தபோது பல மாநில ஆளும் கட்சிகளை கலைத்தது என்று சொல்லி கொண்டே போகலாம்.


Mediagoons
ஜன 24, 2025 23:03

நாட்டின் சிறந்த பிரதமரை இழிவு படுத்துவது தேச துரோகம் என்பது இந்து மதவாத தேச துரோகிகளுக்கு புரிய வாய்ப்பில்லை


vijay
ஜன 24, 2025 21:38

காங்கிரஸ் மற்றும் காலிஸ்தானி நபர்கள் இப்படித்தான் செய்வார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர் கையிலே அரசியலமைப்பு புத்தகத்தை வச்சு மேடைல காமிச்சுக்கிட்டு ஏக்கர் கணக்கில் பொய்கள் சொல்லிவருகிறார். அவர் ஒரு கவுன்சிலர் ஆக இருக்க கூட லாயக்கில்லாதவர். சுதந்திரம் வாங்கியதில் இருந்து நேரு, இந்திரா, ராஜிவ் முதல் இப்போது வரை இந்தியாக்கு சுதந்திரம் வாங்கினதே காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பம்தான் என்று பள்ளி புத்தகங்கள் முதற்கொண்டு எழுதி வைத்துள்ளார்கள். நம்மவர்கள் மதச்சார்பின்மை என்றும், சங்கி, மதவாதம் என்று காங்கிரஸ், திமுக போன்றவை சொல்வதை காலகாலமாக கேட்டு புத்திகெட்டு அவர்களுக்கு வோட்டு போடுகிறார்கள். விளங்கிடும்.


Ramesh Sargam
ஜன 24, 2025 21:00

எமர்ஜென்சி படத்திற்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஏன் இடையூறு செய்யவேண்டும்? இதிலிருந்து என்ன தெரிகிறது?


sankaranarayanan
ஜன 24, 2025 20:49

உலகிலேயே எல்லா தேசங்களிலும் அரசியல்வாதிகளால்தான் தீவிரவாத்துகள் உருவாக்கப்படுகின்றனர் பிறகு தன் வினை தன்னைச்சுடும் என்று தெரிந்தவுடன் அது தங்களுக்கே ஆபத்து வந்துவிடும் என்று தேர்ந்த்து அதே அரசியல்வாதிகளால் அதே தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர் இதுதான் அரசியல் சித்தாந்தம் நாடகம் நடப்பு இல்லை என்று எவருமே கூறமுடியாது பாவம் அப்பாவி மக்கள்தான் இதற்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்


கந்தண்
ஜன 24, 2025 20:06

யார் என்ன சொன்னாலும் இந்திரா ஒரு தைரியசாலி சிறந்த நிர்வாகி : வழ வழ எல்லாம் கிடையாது இப்ப மாதிரி


ஆரூர் ரங்
ஜன 24, 2025 20:29

ஆமாம். No வழவழ..நேரடியாக பிந்தரன்வாலே எனு‌ம் தீவீரவாதியை வளர்த்து அதே தீவிரவாதத்தால் அழிக்கப்பட்டார். தன்வினை தன்னைச் சுட்டது.


சமீபத்திய செய்தி