உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதற்றத்தை தணிக்க நடவடிக்கை; இந்தியா- பாக்., முடிவு

பதற்றத்தை தணிக்க நடவடிக்கை; இந்தியா- பாக்., முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கையை தொடர இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்போவதாக கூறி பாகிஸ்தான் ராணுவம், நமது அப்பாவி மக்கள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் அதிகரித்தது. இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் ராணுவ டி.ஜி.எம்.ஓ., நமது ராணுவ டி.ஜி.எம்.ஓ.,விடம் கெஞ்சியதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இதன் பிறகு கடந்த 10 ம் தேதி இரு நாட்டு டி.ஜி.எம்.ஓ.,க்களும் ஹாட்லைன் மூலம் ஆலோசனை நடத்தினர்.இந்நிலையில், இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 10 ம் தேதி இரு நாட்டு டி.ஜி.எம்.ஓ.,க்கள் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு அடிப்படையில், எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கையை தொடர இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இது குறித்து சூழ்நிலை மாற்றத்திற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kasimani Baskaran
மே 16, 2025 04:03

உலக மகா கேடிகள். ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு வெளியேறவில்லை என்றால் பேச்சுவார்த்தை கிடையாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். சீனாவுக்கும் கட்டம் கட்ட நல்லதொரு வாய்ப்பு.


மீனவ நண்பன்
மே 15, 2025 22:09

பாலைவன சரித்திரத்தை படித்தால் இவர்கள் வலு இழந்த நிலைமையில் சரண்டர் ஆகி அமைதி ஒப்பந்தம் செய்து அடங்கி இருப்பது போல பாசாங்கு செய்வது ..எதிரி அசந்திருக்கும்போது கொலைவெறி தாக்குதல் நடத்துவது என்பது அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது


Karthik
மே 15, 2025 22:45

உண்மை உண்மையிலும் உண்மை..


நிக்கோல்தாம்சன்
மே 15, 2025 21:52

கடைசி வரை இந்த சண்டைக்கு காரணகர்த்தாவாக இருந்த முனிர்க்கு , தீவிரவாத மதர்ஸாவுக்கு கண்டனம் ஏதுமில்லையா யுவர் ஹானர் ?


மீனவ நண்பன்
மே 16, 2025 00:27

இம்ரான் கான் குடைச்சலிலிருந்து கவனத்தை திருப்ப எடுத்த ஆயுதம் பஹல்கான் தாக்குதல் ...


மீனவ நண்பன்
மே 16, 2025 03:56

இம்ரான் கானின் குடைச்சலால் ராணுவமும் அரசாங்கமும் கதி கலங்கி மக்களின் கவனத்தை திசை திருப்ப ஆடிய நாடகம்


புதிய வீடியோ