உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 34-வது முறையாக இந்தியா, பாகிஸ்தான் அணுசக்தி நிறுவனங்கள் பரிமாற்றம்

34-வது முறையாக இந்தியா, பாகிஸ்தான் அணுசக்தி நிறுவனங்கள் பரிமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி இருநாடுகளும் 34வது முறையாக அணு சக்தி தொடர்பான நிறுவனங்களை பரிமாறிக்கொண்டன.இந்தியா, பாகிஸ்தான் இடையே, கடந்த, 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று ஏற்படுத்தப் பட்ட ஒப்பந்தத்தின் படி, கடந்த, 1991 -ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி , இரு நாடுகளும், தங்களின் அணு மின் நிலையங்கள், அணு சக்தியால் இயங்கும் பிற அமைப்புகள் குறித்த பட்டியலை, பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும், ஜன., 1ம் தேதி, இந்தப் பட்டியல், இருநாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் தூதரகங்கள் வாயிலாக பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும்.அந்த வகையில், இந்தாண்டும் (2025) 34-வது முறையாக இந்த பட்டியல் பரிமாறப்பட்டது. இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அல்லது போர் நடைபெறும் போது, அணுசக்தி நிலையங்கள் மற்றும் அணு அமைப்புகள் மீது தாக்குதல் நடைபெறாமல் பாதுகாத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. அணுசக்தி நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளானால், இருநாடுகளுக்கு மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜன 02, 2025 12:59

ரெண்டு பேரும்.பொய்யான தகவல்களை பரிமாறிக்கொண்டிருப்பார்கள்.


Alagusundram Kulasekaran
ஜன 02, 2025 06:39

போர் நடைபெறும்போது குறிப்பாக பாக்கிஸ்தான் இந்த நடைமுறை சட்டதிட்டங்களை கண்டிப்பாக கடைபிடிக்காது அதனை நம்பி ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும் நடைபெற்றால் எதிர்பாராமல் நடை பெற்றது என்று கூறிவிட்டும் நாம் முதலில் அழிக்க வேண்டும்


karutthu kandhasamy
ஜன 01, 2025 20:02

பாகிஸ்தான்காரனை நம்பி எந்த பிரயோசமும் இல்லை எப்போ அவன் புல்வாமா தாக்குதலை பயன்படுத்தி நம் வீரர்களை கொன்றானோ அத்துடன் அவனை ஓதுகிட்டிருக்க வேண்டும் ஆனால் அந்த சப்பை மூக்கன் வந்துடுவான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை