உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுத இறக்குமதியில் 2வது இடத்தில் இந்தியா: முதலிடத்தை பிடித்தது உக்ரைன்

ஆயுத இறக்குமதியில் 2வது இடத்தில் இந்தியா: முதலிடத்தை பிடித்தது உக்ரைன்

புதுடில்லி: உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 8.3 சதவீதத்தை பெற்றுள்ள நம் நாடு, பெரிய ஆயுத இறக்குமதியாளர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை சவுதி அரேபியா முதலிடத்தில் இருந்த நிலையில், அந்த இடத்தை உக்ரைன் கைப்பற்றியுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில், சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 'சிப்ரி' எனப்படும், இந்த நிறுவனம், 1966 முதல் உலகளாவிய ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் அது தொடர்பான சர்வதேச போக்குகளைக் கண்காணித்து வருகிறது. அது தொடர்பாக ஆய்வறிக்கைகளும் வெளியிட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3g0msvea&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், 2020 - 2024 வரையிலான காலக்கட்டத்தில், உலகின் முதல் 10 பெரிய ஆயுத இறக்குமதியாளர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமீபத்தில் இந்த நிறுவனம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:உலகளாவிய பெரிய ஆயுத இறக்குமதியாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மேற்காசிய நாடான சவுதி அரேபியா சரிவை சந்தித்துள்ளது. ரஷ்யாவுடன் போரை சந்தித்து வரும் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் முதலிடத்தில் உள்ளது.இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. முந்தைய 2015 - 2019 ஐந்தாண்டு காலத்தை ஒப்பிடும்போது, 9.3 சதவீதமாக இருந்தது. இந்த வீழ்ச்சிக்கு உள்நாட்டிலேயே ஆயுதங்களை வடிவமைத்து உற்பத்தி செய்யும் நம் நாட்டின் திறன் அதிகரித்து வருவதே காரணம். இதனால், வெளிநாட்டு இறக்குமதிகளை சார்ந்திருப்பது குறைந்துள்ளது.மேற்காசிய நாடான கத்தார் மூன்றாவது இடத்திலும், சவுதி அரேபியா நான்காவது இடத்திலும் உள்ளன. நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் ஐந்தாவது பெரிய நாடாக உள்ளது.அதற்கடுத்த இடங்களில், ஜப்பான், ஆஸ்திரேலியா, எகிப்து உள்ளன. அமெரிக்கா, ஒன்பதாவது இடத்திலும், குவைத் 10வது இடத்திலும் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 11:20

எதிரிகளே இல்லாத நாடுகளும் இறக்குமதி செய்கின்றன. ஆனால் நம்மைச் சுற்றி பாக், சீனா, பங்களாதேஷ் இருப்பதால் பாதுகாப்பு கருவிகள் இறக்குமதி தவிர்க்க முடியாதது. தற்சார்பு ஆத்ம நிர்பார் ஓரளவுக்கே உதவும்.


Anand
ஜூன் 30, 2025 10:54

மற்ற நாடுகள் ஆயுதங்களை வாங்குவது என்னவோ தங்களை தற்காத்துக்கொள்ளவே, ஆனால் உக்ரைன் இவ்வளவு ஆயுதங்களை வாங்கி சண்டையிட்டு எண்ணத்தை சாதிக்கப்போகிறான்? மதியிழந்த கேடுகெட்ட ஜெலன்ஸ்கி எவனோ சொல்வதை கேட்டுக்கொண்டு தங்கள் நாட்டை அழித்துக்கொண்டிருக்கிறான்.


Senthoora
ஜூன் 30, 2025 07:16

10 இடம் அமெரிக்காவுக்கு so அவங்களுக்கு போதுமான ஆயுதம் அவங்களே தயாரிக்கிறாங்க, இருக்கு, இந்தியா இரண்டாவது இடம் என்று பெருமைகொள்ளத்தேவை இல்லை, ஒவொரு ஆயுதத்திலும் ஒரு ஆயுதத்தை இந்தியா வாங்கினால், பிரிச்சு மேஞ்சு செய்ய இந்தியாவில் பல படைப்பாளிகள் இருக்கிறாங்க. என்ன கொமிசன் கிடைக்காது.


Senthoora
ஜூன் 30, 2025 06:55

பலகோடி கொடுத்துவங்கும் இந்த யுத்தம் , அப்பாவிகளின் தலையில் போடப்படும், அல்லது ஒரு சில ஆயிரம்களில் செய்யப்பட்ட ட்ரொன்களினால் வீணாக்கப்படும், இப்போ நடக்கு சண்டைகளில் இதைத்தான் பார்க்கிறோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை