உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசம்-பாகிஸ்தான் செயல்பாடுகளை கவனிக்கிறோம்: இந்தியா எச்சரிக்கை

வங்கதேசம்-பாகிஸ்தான் செயல்பாடுகளை கவனிக்கிறோம்: இந்தியா எச்சரிக்கை

புதுடில்லி: வங்கதேசத்துக்கு ஐ.எஸ்.ஐ., அதிகாரிகளை பாகிஸ்தான் அனுப்பியதை அடுத்து, நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்தவரை, இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள், சதித்திட்டங்களை தடுத்து வந்தார். அவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், வங்கதேசத்தில் இந்திய விரோத மனநிலை கொண்ட அமைப்பினர் இடைக்கால அரசை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., வங்கதேசத்தில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு வருகிறது.பாகிஸ்தானுடன் வங்கதேசத்தின் நெருக்கமான உறவுகள் இந்தியாவை கவலையடையச் செய்கின்றன.வங்கதேசத்துக்கு ஐ.எஸ்.ஐ., அதிகாரிகளை பாகிஸ்தான் அனுப்பியதை அடுத்து, நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: நாடு மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளையும், தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்.பிராந்திய வளர்ச்சிகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நாங்கள் ஜனநாயக, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்தை ஆதரிக்கிறோம். இந்தியா மற்றும் வங்கதேச மக்கள் செழிக்க எங்கள் உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.எல்லையில் இந்தியாவின் எல்லை வேலி அமைப்பதற்கு வங்கதேசம் ஆட்சேபனை தெரிவித்தது குறித்து, கேட்கப்பட்ட கேள்விக்கு, ' மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் சட்டவிரோத நடமாட்டத்தை தடுப்பதை நோக்கமாகக் கொண்டது. வங்கதேசத்துடன் இந்தியா செய்துள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியே, எல்லையில் வேலி அமைக்கப்படுகிறது, என ரந்தீர் ஜெய்ஸ்வால் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஜன 25, 2025 22:00

கூடவே சைனாவின் அசைவுகளையும் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். இவர்களை கவனிக்கும்போது, சத்தமில்லாமல் சீனா, இந்தியாவில் ஊடுருவிவிடுவார்கள். ஜாக்கிரதை.


venugopal s
ஜன 25, 2025 21:55

ஆமாம், அவர்கள் எல்லையைத் தாண்டி ஊடுருவதையும் தடுக்காமல் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம்!


V வைகுண்டேஸ்வரன்
ஜன 25, 2025 17:15

இதுல என்ன செய்தி? ஆபீஸருங்களா, அண்டை நாடுகளின் செயல்பாடுகளை கவனிக்கறது தான் உங்கள் வேலையே. அதுக்கு தான் கோட்டு, சூட்டு, பூட்டு, எல்லாம் குடுக்கறோம். செய்ய வேண்டிய வேலையையே சாதனை போல பில்டப் குடுக்கறீங்க???


canchi ravi
ஜன 25, 2025 15:15

பல உயிர் தியாகத்தால் ஏற்பட்ட வங்கதேசம் மீண்டும் பாகிஸ்தானுடன் உறவு. ஆஹா என்னே அமெரிக்க திட்டம்


Madras Madra
ஜன 25, 2025 15:07

வங்க தேசத்துக்கு ஏழரை ஆரம்பம்


Barakat Ali
ஜன 25, 2025 14:03

ஷேக் ஹசீனா இங்கே வரலாம் ...... மத்த பங்களாதேசிகள் வரக்கூடாதுங்களா ????


பொறியாளன் இளங்கோ
ஜன 25, 2025 14:03

ஆட்டு மந்தைகள் அப்படிதான் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை