உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பு ரோகித் மீண்டும் கேப்டன்; ஷமிக்கு வாய்ப்பு

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பு ரோகித் மீண்டும் கேப்டன்; ஷமிக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., வெளியிட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், இந்திய அணி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. ஐ.சி.சி.,யிடம் பெற்ற கால அவகாசத்திற்கு பிறகு, 12ம் தேதியே அறிவிக்கப்பட வேண்டிய வீரர்களின் பட்டியலை பி.சி.சி.ஐ., இன்று வெளியிட்டுள்ளது. பல்வேறு விமர்சனங்கள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் ரோகித் ஷர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, காயத்தில் இருந்து மீண்டு வந்த முகமது ஷமிக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் விபரம் இதோ,ரோகித் சர்மா, கேப்டன்சுப்மன் கில், துணை கேப்டன்விராட் கோலிஸ்ரேயாஸ் ஐயர்கே.எல்.ராகுல்ஹர்திக் பாண்டியாஅக்சர் பட்டேல்வாஷிங்டன் சுந்தர்குல்தீப் யாதவ்ஜஸ்ப்ரீத் பும்ராமுகமது ஷமிஅர்ஷ்தீப் சிங்ஜெய்ஸ்வால்ரிஷப் பந்த்ரவீந்திர ஜடேஜாகாயத்தால் அவதிப்பட்டு வரும் பும்ரா, உடல் தகுதி நிரூபித்த பிறகே, அணியில் தொடர்வாரா? இல்லையா? என்பது தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

இவன்
ஜன 18, 2025 17:45

யார எடுடுத்தாலும் அதுக்கு ஒரு குறை சொல்றது கொத்தடிமைஸ் தலையாய கடமை


அன்பே சிவம்
ஜன 18, 2025 17:15

mohammad Sami நல்ல தேர்வு, வாழ்த்துகள் Indian Teamக்கு


Duruvesan
ஜன 18, 2025 15:31

பாண்டியா கேப்டன், பும்ரா துணைனு அறிவிச்சி இருக்கலாம்


Duruvesan
ஜன 18, 2025 15:30

கில் துணை கேப்டன்?? யாருக்கு சாமரம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை