உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது: முப்படை தலைமை தளபதி சவுகான் திட்டவட்டம்

ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது: முப்படை தலைமை தளபதி சவுகான் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ''ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொண்டோம். இந்த ராணுவ நடவடிக்கை தொடர்கிறது'' என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்தார்.மத்தியப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் பேசியதாவது: இந்தியா புத்தர், மகாவீர் ஜெயின் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் பூமியாக இருந்து வருகிறது. அனைவரும் அகிம்சையின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால் அமைதியாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. பாதுகாப்பு படையினர் பண்டைய காலங்கள் போலவே ஒரு அறிஞராகவும், போர்வீரராகவும் செயல்பட வேண்டும். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் மாதிரி தான். இது ஒரு நவீன கால மோதல். அதில் இருந்து நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டோம். அவற்றில் பெரும்பாலானவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சில செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் தொடர்கிறது. இவ்வாறு அனில் சவுகான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

cpv s
செப் 19, 2025 15:20

mental you get out from india


Priyan Vadanad
ஆக 26, 2025 19:29

எங்க எங்க அத நான் பாக்குறேன்...கண்ண மூடு அத நான் காட்டுறேன்.


R K Raman
ஆக 27, 2025 08:39

பேசாமல் இந்த நாட்டைவிட்டு வெளியேறலாமே தேச துரோகம் செய்யும் பாவத்திலிருந்து தப்பிக்கலாம்


Tamilan
ஆக 26, 2025 17:44

பித்துபிடித்து அலையும் மக்களை ஏமாற்றும், தங்கள் கொள்ளை தோல்விகளிலிருந்து திசை திருப்பும் செயல்


R K Raman
ஆக 27, 2025 08:40

மானமிலாத பேச்சு. 200க்கு எதையும் செய்யும் போல


Kudandhaiyaar
ஆக 26, 2025 17:04

வரும் மார்ச் மதம் முதல் ஜூலை மாதத்திற்குள் நாம் மீண்டும் ஒரு போரை சந்திக்க வேண்டி இருக்கும். இந்திய நாட்டின் ஜாதகப்படி ஒரு சிரமமான காலா கட்டத்தில் இருக்கிறோம். ஆகஸ்ட் 2025 முதல் ஆகஸ்ட் 2032 வரை உள்ள காலகட்டம் சிரமமானது அதிலும் அடுத்த 2 வருடங்கள் மிகவும் சிரமமானவை. காசா பகுதியில் எப்படி மக்கள் சாப்பாட்டிற்கு சிரம படுகிறார்களோ அதற்கு இணையாக யுத்தம், பசி, பட்டினி, கொலை, கொள்ளை, அந்நிய நாடுகள் வுடன் தகராறுகள் போன்றவை ஏற்படும். நல்லது நடக்க பிரார்த்தனை செய்வோம்


Nada raja
ஆக 26, 2025 15:52

ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கையை யாராலும் மறக்க முடியாது ஜெய்ஹிந்த்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை