உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனை; அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான்!

கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனை; அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டது. கடல்சார் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது.காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i6zqxjnl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாக்., உடனான வாகா- அட்டாரி எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது. இதனால் பீதி அடைந்த பாகிஸ்தான், கராச்சி கடலோரப் பகுதியில் இருந்து ஏவுகணை சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே பயங்கரவாதிகளை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் இருக்க வேண்டும் என முப்படைகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 24) இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சூரத் போர் கப்பலில் இருந்து துல்லியமான கடல்சார் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை தற்போது வெற்றி பெற்றுள்ளது.கராச்சி கடற்பகுதியில் பாக்., ஏவுகணை சோதனை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில் இந்தியா சோதனை நடத்தியது பேசும் பொருளாகி உள்ளது. பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என மத்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பா மாதவன்
மே 03, 2025 15:04

தினமும் பாகிஸ்தான் பயந்து பயந்து சாகும்படி செய்து, பின் ஒருநாள் திடீர் என்று சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி, அங்குள்ள அத்தனை தீவிரவாதிகளையும் நம் இராணுவத்தினர் ஒழித்துக் கட்டுவார்கள் என்று நம்புவோம். பாகிஸ்தான் நாட்டில் எல்லோரும் தீவிரவாதிகள் ஆனால் தேசப் பற்றுடன் உள்ளனர். நம் நாட்டில், அரசியல்வாதிகளில் பாதிப் பேர் தேசப் பற்றற்று, அரசியல்வாதி என்ற பெயரில் ஒருவித பொய் பிரச்சாரம் என்ற நச்சு கலக்கக் கூடிய அரசியல்வியாதிகளாக உள்ளனர். எனவே, இங்குள்ள அந்த நச்சு அரசியல்வாதிகளை ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அனுப்பிவிட்டு ஒரே சர்ஜிக்கல் தாக்குதலில் ஒட்டுமொத்த தீவீரவாதிகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஏப் 24, 2025 21:28

பாகிஸ்தானை கதறடிக்க வேண்டும் , அதற்கு முக்கிய நிகழ்வாக புலிகேசியை அங்கே தலைமை பொறுப்பில் உட்கார வைக்கலாம் கடன் வாங்கி அந்த நாட்டை திவாலாக்குவதில் பெரிய பங்காற்றுவார்.


தத்வமசி
ஏப் 24, 2025 20:58

பாகிஸ்தானை மட்டும் அடித்து பயனில்லை. உள்நாட்டில் உள்ள ஐந்தாம்படைகளையும் களைய வேண்டும்.


Mr Krish Tamilnadu
ஏப் 24, 2025 20:20

ஏவுகணை எல்லாம் எக்ஸ்பெரி ஆவதற்கு முன்னாடி, தீவிரவாத குழுக்களின் மறைவிடங்களை மறைவதற்காவது பயன்படுத்துங்க. குளம் வற்றினால் நண்டுகள் எல்லாம் வெளியே வரும். மீன்களை விட்டு விடுவோம். நண்டுகளை நசுக்கி எறிவோம். அந்த தீவிரவாத செயல் செய்தவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க தயாரா? காஷ்மீருக்கு நாம் அனுமதியின்றி, அவர்கள் எல்லை வழியாக தான் வரவும் முடியும், போகவும் முடியும். பிறகு?.மீன்களுக்கு ஆபத்தில்லாமல், நண்டுகளை வேட்டையாட அனுமதி தரட்டும். சிறுபான்மையினரை சிறப்பாக மதிப்பவர்கள் நாம்.


Bhakt
ஏப் 24, 2025 19:03

சுடுகாடாக மாறட்டும் பொறிக்கிஸ்தான்.


Karthik
ஏப் 24, 2025 18:59

பாகிஸ்தான் பக்கிகளுக்கு அவர்களுக்கு புரிகிற பாஷையில் பதிலடி கொடுத்தால் மட்டுமே புரியும். அதற்கு நாம் இஸ்ரேலின் நெதன் யாகு ஃபார்முலாவுடன் அவர்களது டெக்னாலஜியையும் பயன்படுத்தலாம் - ஒரே அடியில் கை மேல் பலன் கிடைக்கும்.


thehindu
ஏப் 24, 2025 18:47

ஐவருக்காக ஒரு ஏவுகணையா ? பயந்தவனுக்கு கண்டதெல்லாம் பேய் . மிரண்டவனுக்கு ஏவுகணை முப்படைகளா?


بی ڈیوڈ رافیل
ஏப் 24, 2025 17:32

பாகிஸ்தான் country அழிச்சு துவம்சம் பண்ணனும். அப்ப தான் நிம்மதியா இருக்க முடியும்


Dharmavaan
ஏப் 24, 2025 16:38

இஸ்ரேலிய உதவியை பெற வேண்டும் .காஜாபோல பாகிஸ்தானை அழிக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை