உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவத்தில் 30 பேருக்கு வேலை ரெடி: பொறியியல் பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு!

ராணுவத்தில் 30 பேருக்கு வேலை ரெடி: பொறியியல் பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு!

புதுடில்லி: இந்திய ராணுவத்தில் சிவில், கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட பதவிகளுக்கு 30 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 17.இந்திய ராணுவத்தில் சிவில், கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இன்ஜினியரிங்- 2,சிவில் இன்ஜினியரிங் - 8,கணினி அறிவியல் இன்ஜினியரிங் - 6,எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் - 2,எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 6,மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - 6,

கல்வித்தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில், சம்பந்தப்பட்ட துறை ரீதியாக, பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு 20 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பிறகு, மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் ரூ.200. எஸ்.சி., எஸ்.சி., உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி