வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு ஜீஈயையும் காணாமே? மத்திய தேர்தலுக்குத் தான் அந்த கூட்டம் வருமா? ஓக்கே, ஓக்கே.
புதுடில்லி: உலக அளவில் ஒரு வலிமையான சக்தியாக இந்திய ராணுவம் மாறி வருகிறது என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்து உள்ளார்.கார்கில் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நடத்தப்பட்ட தாக்குதல்கள், பயங்கரவாதிகள் விட்டு வைக்கப்பட மாட்டார்கள் என்பதற்கான தெளிவான பதிலை பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3kg2j3yc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் ஒன்பது பயங்கரவாத முகாம்களை ராணுவம் அழித்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை திறம்பட குறிவைத்து இந்தியா ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றது.உலக அளவில் ஒரு வலிமையான சக்தியாக இந்திய ராணுவம் மாறி வருகிறது. நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, அரசு வழங்கிய அனுமதியை தொடர்ந்து இந்தியா தக்க பதிலடியை கொடுத்தது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, மக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ஒரு ஜீஈயையும் காணாமே? மத்திய தேர்தலுக்குத் தான் அந்த கூட்டம் வருமா? ஓக்கே, ஓக்கே.