உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியன் வங்கியில் வேலை; பட்டதாரிகள் 300 பேருக்கு சூப்பர் சான்ஸ்!

இந்தியன் வங்கியில் வேலை; பட்டதாரிகள் 300 பேருக்கு சூப்பர் சான்ஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசு வங்கியான இந்தியன் வங்கியில், 300 அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 2ம் தேதி.இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பேங்க் ஆபிஸர்ஸ் ஜே.என்.ஜி ஸ்கேல்-1 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 160 காலி பணியிடங்கள் உள்ளன. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி என்ன?

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க, 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு சலுகை

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD (Gen/ EWS) 10 ஆண்டுகளும், PwBD (SC/ ST) 15 ஆண்டுகளும், PwBD (OBC) - 13 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

கட்டணம்

விண்ணப்ப கட்டணம் ரூ.1000. எஸ்.சி., எஸ்.டி, மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.175.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://ibpsonline.ibps.in/iblbojul24/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விதிமுறைகள்!

* விண்ணப்பதாரர்கள் ஒரு மாநிலத்தின் காலியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் முதல் 12 ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்திற்குள் பணியமர்த்தப்படுவார்கள்.* விண்ணப்பத்தாரர்கள் மாநிலத்தின் விரும்பிய உள்ளூர் மொழியில் படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதலில் திறமையானவராக இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Krishnan
ஆக 14, 2024 11:56

IndOASIS App not working for several days. Branch asking us to wait. No media news about it.


வைகுண்டேஸ்வரன்
ஆக 14, 2024 10:42

ஆரூர் ராங் இந்த செய்தி படிக்கலியா?? ஹா ஹா ஹா.


அப்பாவி
ஆக 14, 2024 08:29

முப்பது கோடி பட்டதாரிகள் விண்ணப்பித்து கட்டணமாகவே மூவாயிரம் கோடி வசூலாகும். அதுக்கு 18% ஜி.எஸ்.டி உருவிடுவாங்க.


karutthu
ஆக 14, 2024 08:57

அதில் சந்தேகமே இல்லை GST என்கிற பெயரில் இது ஒரு பகல் கொள்ளை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை