உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2025ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்: மற்ற நாடுகள் நிலை தெரியுமா?

2025ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்: மற்ற நாடுகள் நிலை தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2025ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என ஐ.எம்.எப்., தெரிவித்துள்ளது. உலகின் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் வளர்ச்சி தான் அதிகமாக இருக்கும் என்றும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இன்டர்நேஷனல் மானிட்டரி பண்ட் (ஐ.எம்.எப்.,) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 2025ம் மற்றும் 2026ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும். புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் போர் உள்ளிட்ட சூழலிலும் இந்தியா பெரிய பொருளாதாரம் கொண்ட என்ற அடையாளத்தை தக்க வைத்துள்ளது.ஆனால் தொழில்துறை வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சரிவை கண்டுள்ளது. 2025-26ம் ஆண்டில் அதன், பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விவரம் பின்வருமாறு:அமெரிக்கா- 2.7%, ஜெர்மனி- 0.3%, இத்தாலி - 0.7%, ஜப்பான்- 1.1%, இங்கிலாந்து- 1.6%, கனடா- 2.0%, சீனா- 4.6%, ரஷ்யா- 1.4%, பிரேசில்- 2.2%, தென்னாப்பிரிக்கா- 1.5%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
ஜன 18, 2025 17:45

நீ பத்தாம் வகுப்பு ஃபெயில் நான் இரண்டாம் வகுப்பு பாஸ் என்று பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டியது தான்!


SS
ஜன 18, 2025 13:48

வளர்ச்சி விகிதம் GDP யில் கணக்கிடப்படுகிறது.அமெரிக்கா சீனா ஜப்பான் போன்ற நாடுகளின் GDP நம்மை விட பலமடங்கு அதிகம்.


Kalyan
ஜன 18, 2025 16:06

Then why IMF calculate differently for different countries.


Barakat Ali
ஜன 18, 2025 12:30

இதை நாங்க நம்பமாட்டோம் .......... இந்தியாதான் பின்தங்கி இருக்கும் ன்னு போட்டிருந்தா மோடியை, நிம்மிம்மாவை வசைபாட ஏதுவா இருந்திருக்கும் .....


சமீபத்திய செய்தி