உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளது; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளது; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

புதுடில்லி: நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறி உள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான ஜிடிபி விகிதம் 2025-26 நிதியாண்டின் 2வது காலாண்டில் 8.2 ஆக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90 என்ற நிலைக்குச் சென்றது. இந் நிலையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி குறித்து வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு; நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளது. 2ம் காலாண்டில் கூட வளர்ச்சி 8.2% ஆக உள்ளது. சில மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த பணவீக்கத்தைக் கண்டுள்ளோம். அந்நியச் செலாவணி இருப்பு தொடர்ந்து வலுவாக உள்ளது. மூலதன வரவுகள் மற்றும் உள்கட்டமைப்பு, நுகர்வோர் செலவு, வணிகப் பொருட்களின் ஏற்றுமதிகளும் வலுவான நிலையில் உள்ளன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களை ஒருங்கிணைத்தால், உலகளாவிய சூழலுக்கு மத்தியிலும் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் வளர்ச்சி உள்ளது. இது பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதையே காட்டுகிறது. உலகளாவிய வர்த்தகர்களுடனான ஒருங்கிணைப்பை நோக்கி பணியாற்றி வருகிறோம்.இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ