உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாளில் 2வது கொள்ளை முறியடித்தது இந்திய கடற்படை

ஒரே நாளில் 2வது கொள்ளை முறியடித்தது இந்திய கடற்படை

புதுடில்லி :அரபிக்கடலில் பாகிஸ்தானைச் சேர்ந்த, 19 பேர் சென்ற மீன்பிடிக் கப்பலை, சோமாலியா கடற்கொள்ளையர் நேற்று முன்தினம் கடத்தினர். நம் கடற்படை விரைந்து சென்று, கப்பலுடன், 19 பேரையும் பாதுகாப்பாக மீட்டது.அரபிக்கடலில், அல் நயீமி என்ற மீன்பிடி கப்பல் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பலில், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் இருந்தனர்.அப்போது அங்கு வந்த ஆயுதமேந்திய சோமாலிய கொள்ளையர், மீன்பிடி கப்பலை கடத்தியதுடன், அதிலிருந்த 19 பேரையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். கப்பலில் இருந்தவர்கள் அவசர உதவி கோரியதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற நம் கடற்படையின், ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல், கடற்கொள்ளையரிடம் இருந்து கப்பலையும், 19 பேரையும் பாதுகாப்பாக காப்பாற்றியது.இது குறித்து, நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் விவேக் மத்வால் கூறியதாவது:அரபிக்கடலில் சென்ற அல் நயீமி என்ற மீன்பிடி கப்பலையும், அதிலிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த, 19 பேரையும், சோமாலியாவைச் சேர்ந்த, ஆயுதமேந்திய 11 கடற்கொள்ளையர் கடத்தினர். கப்பலில் இருந்தவர்கள் அவசர உதவி கோரியதை அடுத்து, நம் கடற்படையின், ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பலில் இருந்த அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து, கடற்கொள்ளையரிடம் பேசி, கப்பலையும், 19 பேரையும் பாதுகாப்பாக காப்பாற்றினர். கடலில் உள்ள அனைத்து கப்பல்கள் மற்றும் கடற்படையினரின் பாதுகாப்பை, நம் கடற்படை உறுதி செய்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 24 மணி நேரத்தில், இரண்டாவது கடற்கொள்ளை முயற்சியை, நம் கடற்படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.கடந்த 28ம் தேதி இரவு, சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில், ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பலையும், 17 பேரையும், சோமாலியா கொள்ளையர் கடத்தினர். இந்த கடத்தல் முயற்சியையும், ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

jayvee
ஜன 31, 2024 19:46

எங்கள் படகை கடத்தியது சோமாலியா கொள்ளைக்காரர்கள் அல்ல .. இந்தியாவே சிவில் உடையில் வந்து கடத்தி பிறகு கைப்பற்றியது.. பாக்கிஸ்தான் அமைச்சர் இப்படியும் சொல்வர்


PR Makudeswaran
ஜன 31, 2024 15:10

இந்திரா காந்தி மற்றும் காங்கிரஸ் மற்றும் மு க வின் கூட்டு சதி கச்ச தீவு தாரை வார்த்தல்.


Suppan
ஜன 31, 2024 11:00

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட காரணம் என்ன என்பதை யாராவது விளக்குவார்களா? இன்றுவரை இந்தச்செயல் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.


Victor Christopher
ஜன 31, 2024 10:49

ஈரான் & பாக்கிஸ்தான் நன்றி சொல்லவேண்டும் பாராட்டுக்கள்


Indian
ஜன 31, 2024 10:15

பாராட்டுக்கள்


இளந்திரையன், வேலந்தாவளம்
ஜன 31, 2024 10:12

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்


KavikumarRam
ஜன 31, 2024 09:27

இப்படி நம் எதிரி நாடுகளுக்கும் உதவி பண்ணி உலக அரங்கில் நம் வீரத்தை நிலை நிறுத்தி சீனாவின் கடலாதிக்கத்தை முற்றிலும் அழிக்க வேண்டும்.


Dharmavaan
ஜன 31, 2024 07:36

பாகிஸ்தானுக்கு உதவி செய்யக்கூடாது.நன்றி கெட்டவர்கள்


Pandi Muni
ஜன 31, 2024 06:46

அய்ய. யாருக்கு நல்லது பன்றோம்னு நம்ம கடற்படைக்கு ஒரு அடிப்படை அறிவு வேண்டாமா?


Kasimani Baskaran
ஜன 31, 2024 05:31

அரபிக்கடல் பகுதியில் இந்திய கப்பற்படையின் ஆதிக்கம் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பது காலத்தின் கட்டாயம்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி