வாசகர்கள் கருத்துகள் ( 2 )
But please refund the ITR refunds and not take your own sweet time.
அருமை
புதுடில்லி: இந்திய கடற்படை தனது போர்த்திறனை வலுப்படுத்துவதற்காக 4 புதிய போர்க்கப்பல்களை கட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளது. இதற்காக ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பில் டெண்டர் விடுவது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.இந்த போர் கப்பல்களில் இருந்து டிரோன்களை இயக்கவும், கட்டுப்பாட்டு மையமாக செயல்படும் வகையிலும் புதிய கப்பல்களை கட்டமைக்க திட்டமிட்டு உள்ளது. இது குறித்த பரிந்துரையை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்திய கடற்படையின் திட்டம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உள்ளது. நாட்டில் மிகப்பெரிய போர்க்கப்பல் கட்டுமானத்தில் ஒன்றாக இது இருக்கும் என்றனர்.இந்த ஒப்பந்தத்தை பெற எல் அண்ட் டி, மஜகோன், டக்யார்ட்ஸ், கொச்சின் ஷிப்யார்டு மற்றும் ஹிந்துஸ்தான் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.இந்த கப்பலின் வடிவமைப்பை நிர்ணயிப்பதில் சர்வதேச நிறுவனங்களான நவன்டியா, நேவல் குரூப், பின்கேன்டியரி ஆகிய நிறுவனங்கள் பரிசீலனையில் உள்ளன.
But please refund the ITR refunds and not take your own sweet time.
அருமை