உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாயகம் திரும்பிய இந்திய வீரர்; மகிழ்ச்சி பொங்க மனைவி சொன்ன வார்த்தைகள் இதோ!

தாயகம் திரும்பிய இந்திய வீரர்; மகிழ்ச்சி பொங்க மனைவி சொன்ன வார்த்தைகள் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எல்லை தாண்டி சென்றதால் பாகிஸ்தான் வசம் இருந்த, எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் பூர்ணம் குமார் ஷா தாயகம் திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது மனைவி ரஜனி ஷா தெரிவித்தார்.பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) வீரர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் 20 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். இவர் மேற்குவங்க மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4grhxjzm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவரை கைது செய்த தகவலை அறிந்த மனைவி ரஜனி ஷா கவலை அடைந்தார். அது மட்டுமின்றி கணவனை மீட்டு தாருங்கள் என அரசிற்கு கோரிக்கை வைத்து கொண்டே இருந்தார். இந்நிலையில், கணவன் விடுவிக்கப்பட்ட தகவல் அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். பூர்ணம் குமார் ஷா மனைவி ரஜனி ஷா கூறியதாவது: பிரதமர் மோடி இருப்பதால் தான் எல்லாம் சுமூகமாக நடக்கிறது. ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. எனது கணவரை மீட்டதற்கு நான் என் கைகளைக் கூப்பி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். காலையில் ஒரு அதிகாரியிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. என் கணவரும் வீடியோ கால் மூலம் என்னிடம் பேசினார். அவர் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்கிறார். பதட்டமாக இருக்க வேண்டாம். அவர் நலமாக இருக்கிறார். எனக்கு அனைவரின் ஆதரவும் இருந்தது. முழு நாடும் என்னுடன் நின்றது. எனவே, கூப்பிய கைகளுக்கு அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவரின் ஆதரவு காரணமாக தான் என் கணவர் இந்தியாவுக்கு திரும்ப முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramanujam Veraswamy
மே 14, 2025 19:40

She has conveniently forgotten Madam Mamata, CM of West Bengal - to whom also she had made a request.


Arinyar Annamalai
மே 14, 2025 17:46

மோடியிருக்க பயமேன்


venkatan
மே 14, 2025 17:43

நீங்கள் இரவில் விழித்திருப்பதால்தான் நாங்கள் தூங்குகிறோம்.ஜெய் ஜவான்..ஜெய் கிஸ்ஸான்..


Barakat Ali
மே 14, 2025 16:47

அப்போ எங்க விடியல் சார் முயற்சில நடக்கலையா?? திமுக கொத்தடிமைகள் எரிச்சல் .....


V Venkatachalam
மே 14, 2025 18:10

மேற்கு வங்கத்தை சேர்ந்த ராணுவ வீரருக்கு மம்மூதா பானர்ஜி தானே பஸ் அனுப்ப முடியும். இரண்டாவது இது உக்ரைன் மீட்பு இல்லையே.. ஸ்டிக்கர் ஒட்டி முடியாது.


MUTHUKUMAR C
மே 14, 2025 20:11

பொதுமக்களை பற்றி கவலை எதுக்கு இவங்களுக்கு.


Anand
மே 14, 2025 16:35

உறுதிமிக்க நாட்டுப்பற்றுள்ள தலைவர்களால் மட்டுமே இதுபோன்ற செயல்களை செய்து முடிக்க முடியும்.. ஜெய் ஹிந்த்


krishna
மே 14, 2025 16:34

MODI ENNUM SINGA THALAIVAN ULLAR.


Seekayyes
மே 14, 2025 16:28

பிரதமராக மோடிஜி தொடரும் வரை, வரும் காலங்களில் பஜக ஆட்சியில் இருக்கும் வரை, பாரதம் சிறப்பாக, செழிப்பாகதான் இருக்கும். சந்தேகம் வேண்டாம்.


M. PALANIAPPAN, KERALA
மே 14, 2025 16:17

மோடிஜி இந்தியா பிரைம் மினிஸ்டராக இருக்கும் வரை எல்லா ராணுவ வீரரும் நல்ல பாதுகாப்பான பொசிஷன்ல்தான். மோடிஜியின் கீழ் எல்லா ராணுவ வீரர்களும் நல்ல உற்சாகத்துடனும் நல்ல எனர்ஜியுடனும் பணி புரிவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. ராணுவ வீரர்களுடன் இதற்கு முன்பு எந்த பிரைம் மினிஸ்டர் பண்டிகை கொண்டாடிஉள்ளார், மோடிஜியை தவிர. நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் மோடிஜி நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்


சிவம்
மே 14, 2025 15:39

பிரதமர் மோடிஜிக்கு அபிநந்தனும் ஒன்றே பூர்ணம் குமாரும் ஒன்றே. அவர் பிரதமராக இருப்பதற்கு நாம் தான் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.


kannan sundaresan
மே 14, 2025 14:43

எல்லை காக்கும் படை வீரர்களுக்கு வணக்கும்.


Arinyar Annamalai
மே 14, 2025 17:49

மோடி என்கின்ற காவல் தெய்வம் யிருக்கும் வரை கவலையில்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை