உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய அணி வெற்றி: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

இந்திய அணி வெற்றி: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் கோப்பை வென்றதை அடுத்து நாடுமுழுவதும் பொதுமக்கள் உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்கின்றனர்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலில் இன்று இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. தீப்தி சர்மாவின் பெற்றோர் மகிழ்ச்சி:இந்நிலையில் உத்தரபிரதேசமாநிலம் ஆக்ராவில் இந்திய அணி கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மாவின் பெற்றோர் கூறுகையில், 'நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறோம். முழு தேசமும் கொண்டாடுகிறது. தீப்தி வீட்டிற்கு வரும்போது, ​​அவருக்கு ஆக்ரா முழுவதும் இருந்து ஒரு பிரமாண்டமான வரவேற்பு கிடைக்கும். அவர் இன்று மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.' இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை