உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்

பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயார் நிலையில், அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே விடிய விடிய தாக்குதல் நடைபெற்று வருகிறது.ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா, அர்னியா, சம்பா, ஹிராநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஆனால், அனைத்தையும் இந்திய ராணுவத்தினர் இடைமறித்து தாக்கி அழித்தனர். ஜெய்சால்மர் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தானி ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பெரும் பதற்றம் நிலவி வருகிறது. நேற்று பாகிஸ்தானின் மிகப்பெரிய துறைமுகமான கராச்சி முறைமுகத்தின் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது. ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர்க்கப்பல் மூலமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லையில் இந்திய ராணுவத்தினர் ஒருபுறம் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இந்திய கடற்படையினரும் தங்களின் பணிகளை தொடங்கியுள்ளனர். அரபிக்கடலில் போர் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பல இலக்குகளை குறிவைத்து போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை