உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்!

இந்தியர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மலேசியா, தாய்லாந்து உட்பட 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 77வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் தயாரித்துள்ளது. உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல், இந்தோனேசியா, மாலத்தீவுகள், மலேசியா, தாய்லாந்து உட்பட 59 நாடுகளுக்கு செல்லலாம். கடந்தாண்டு, 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். தற்போது, 57 நாடுகளில் இருந்து 59 நாடாக அதிகரித்துள்ளது.தரவரிசை பட்டியலில், இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டு 85வது இடத்தில் இருந்தது. விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அதற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளன. டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய ஏழு ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்போர், 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல் மற்றும் ஸ்வீடன் ஆகியவை 4வது இடத்தையும், நியூசிலாந்து, கிரீஸ் மற்றும் சுவிட்சர்லாந்து 5வது இடத்தையும் பிடித்துள்ளன.ஆஸ்திரேலியா, செக் குடியரசு, ஹங்கேரி, மால்டா மற்றும் போலந்து ஆகியவை 7வது இடத்தில் உள்ளன. அதே நேரத்தில் கனடா, எஸ்டோனியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 8வது இடத்தில் உள்ளன.ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜூர்க் ஸ்டெபென் கூறியதாவது: உங்கள் பாஸ்போர்ட் இனி ஒரு பயண ஆவணம் மட்டுமல்ல, இது உங்கள் நாட்டின் ராஜதந்திர செல்வாக்கு மற்றும் சர்வதேச உறவுகளின் பிரதிபலிப்பாகும். வளர்ந்து வரும் சமத்துவமின்மை மற்றும் பெருகிவரும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையின் சகாப்தத்தில், குடியுரிமை திட்டமிடல் எப்போதையும் விட மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
ஜூலை 24, 2025 04:12

இந்திய சுற்றுலா பயணிகளை நம்பி பல நாடுகள் இருக்கின்றன. அவற்றின் பொருளாதாரத்தில் இந்தியாவால் பெரிய தாக்கங்கள் உண்டு. அதை பல நாடுகள் சரியாக பயன்படுத்துவது இல்லை. மலேஷியா சமீபத்தில் அதை புரிந்து கொண்டு இருக்கிறது. விரைவில் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2025 23:17

இந்தியா பணக்கார நாடாக மாறிவருவதால், விசா இன்றி அறுபது நாடுகளுக்கு செல்ல முடியும். இந்திய பொருளாதாரம் இரண்டு ஆண்டில் மூன்றாவது பெரிய பணக்கார பொருளாதார நாடாக மாறிவிடும். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் வேலை செய்ய அமெரிக்கர்கள் இந்திய எம்பஸியில் வரிசையில் நிற்பார்கள். என்பது சதவீத உலகமக்கள் கிழக்கில் வாழ்கிறார்கள். இனி உலகம் கிழக்கே தான். கிழக்கில் ஜொலிக்கும் நட்சத்திரமாக இந்தியாவை பிஜேபி அரசு மாற்றுகிறது.


nisar ahmad
ஜூலை 24, 2025 11:42

உலகின் வல்லரசு உலக பணக்கார நாடு பிச்க்காரர்களே இல்லாத நாடு தனி மனித வருமானத்தில் முதல் நாடு அனைத்து மக்களுக்கும் சொந்த வீடு கொண்ட நாடு தன்னிறைவு அடைந்த நாடு இந்தியா.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 23, 2025 22:53

இலங்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்பட்டியலில் இருந்ததே


Nada raja
ஜூலை 23, 2025 22:52

காங்கிரஸ் ஆட்சியை விட, பிரதமர் மோடி ஆட்சியில் தான் இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் மதிப்பு கூடியது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை