உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோதனை ஆய்வுக்கூடம் இந்தியா: பில்கேட்ஸ் கருத்தால் சர்ச்சை

சோதனை ஆய்வுக்கூடம் இந்தியா: பில்கேட்ஸ் கருத்தால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான பில்கேட்ஸ், 69, சமீபத்தில், 'பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அப்போது பில்கேட்ஸ் கூறியதாவது: இந்தியாவில் உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு வருகின்றன. அங்கு அனைத்தும் நிலையாக உள்ளதால், போதுமான வருவாய் கிடைக்கிறது. அடுத்த 20 ஆண்டுகளில் அந்நாட்டில் உள்ள மக்கள் வியத்தகு முறையில் முன்னேறி இருப்பர்.புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடமாக இந்தியா விளங்குகிறது. அங்கு நிரூபணமான பின், ஒரு விஷயத்தை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார். பில்கேட்சின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.'இந்தியர்களான நாம், பில்கேட்சுக்கு விலங்குகள் போல தெரிகிறோம். அதனால் ஒரு புதிய விஷயத்தை நம் மீது பரிசோதிக்க அவர் விரும்புகிறார். 'முறையான உரிமம் இல்லாமல், அவரது அலுவலகம் நம் நாட்டில் இயங்குகிறது. நம் கல்வி முறை அவரை ஹீரோவாக்கி விட்டது. எப்போது விழிப்போம் என தெரியவில்லை' என, பலரும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

சாண்டில்யன்
டிச 05, 2024 09:24

பழைய கதை ஏன் இந்தியாவில் மட்டும் ஏனித்தனை "மாற்றுத் திறனாளிகள்" பிறக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா?


ram
டிச 04, 2024 13:58

கோரோனோ வைரஸை பரப்பி விட்டவர் இவர் என்று சில ஊடகங்கள் எழுதின ......


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 13:51

Population Matters என்கிற பிரிட்டிஷ் அமைப்பே பில் கேட்ஸ் ன் நோக்கத்தை சந்தேகித்து Conspiracy chaos: coronavirus, Bill Gates, the UN and population என்ற கட்டுரையை இணையத்தில் வெளியிட்டிருந்தது ....


Perumal Pillai
டிச 04, 2024 13:01

He tried to kill crores of Hindus by unleashing the China Virus with his shoddy collaborator Xi but it was not happening because of the indigenous vaccination program carried out vigorously by Modi. He is a man who employs his mammoth wealth only for destructive purposes just like Soros who is known for destabilizing governments all over the globe. Another deep state actor.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 13:00

மேலை நாடுகளில் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் ஆங்கில மருந்துகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு சாம்பிள் அனுப்பித்தான் பரிசோதிக்கிறார்கள்.. அவற்றை மருத்துவர்களும் இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கி நோயோ, உடலோ கொடுக்கும் எதிர்வினையை பல ஆய்வுகள் மூலம் அறிந்து வெளிநாடுகளில் உள்ள அந்தந்த மருந்து நிறுவனங்களுக்கு ரிப்போர்ட் அனுப்பி, பெரும்பணம் சம்பாதிக்கிறார்கள்.. இந்நிலை சுதந்திரம் அடைவதற்கு முன்பே இருந்ததாக அறிகிறேன் .....


Ravichandran,Thirumayam
டிச 04, 2024 15:29

உண்மையை கூறி சிந்திக்க வைத்த கருத்து நன்றி!


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 12:54

போபாலில் அமைந்திருந்த, அமெரிக்கத் தொழிலதிபர் ஆண்டர்சனின் நிறுவனமான யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவே ஒரு சோதனை முயற்சிதான்.. அது நடக்கும் முன்னரே பிபிசி ஒரு மூன்றாம் உலக நாட்டில் இதைப்பரிசோதிக்க திட்டம் இருப்பதாகக் கூறியது.. ஆண்டர்சனைக் காப்பாற்றி பத்திரமாக அமெரிக்கா அனுப்பி வைக்க அன்றைய காங்கிரஸ் அரசு பெரிதும் உதவியது.. இந்த சம்பவத்தில் பலியானவர்கள் அதிகம் பேர் இஸ்லாமியர்களே .....


Sivagiri
டிச 04, 2024 12:44

சோதனை எலிகள் போல - சோதனை குரங்குகள் போல - சோதனைக்காக, அடிமைகளாக, மனிதர்களை, காசு கொடுத்து விலைக்கு வாங்கும் தொழில், இந்தியாவில் பல்வேறு மருந்து கம்பெனிகள் செய்து கொண்டுதான் இருக்கின்றன... இங்கே செயற்கை கருவூட்டல் மருத்துவமனைகள் அனைத்துமே, முறையான உறுதியான கருவூட்டல் இருக்குமா என்பதுவே சந்தேகம்.. அனைத்துமே மனிதர்களை சோதனை எலிகளாகதான் நடத்துகின்றன. கேள்வி கேட்க நாதியில்லை.. எல்லாம் கோடானு கோடி கொழிக்கும் , மெடிக்கல் மாபியாக்கள்தான் . . .


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 12:36

இதென்ன தமிழ் என்று யாரேனும் விளக்கவும் : "ஓவாவுக்கு", "ஒண்கொள்". நன்றி. Incirrigibles.


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 13:23

Thats "incorrigibles". Pls correct


ஆராவமுதன்,சின்னசேலம்
டிச 04, 2024 13:44

இந்த தமிழ் உபிக்கு புரியாது 10 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவனுக்கு IQ 162 இருந்துச்சாம். அப்பதான் உன்னைப் போன்ற அறிவாலய ஊபிஸ்களுக்கு எவ்வளவு IQ இருக்கும் என்று ஒரு கணக்கு போட்டுப் பார்த்தேன் Very Low IQ அதாவது 5 To 10 குள்ளதான் வருது வெரி funny boys.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 13:53

incorrigible என்று எழுதியிருக்க வேண்டும் இந்த ஆங்கிலப்புலமை மிக்க வித்தகர் .....


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 11:55

பில் கேட்ஸாவது வெளிநாட்டவர், இந்தியா பற்றி இப்படி பேசிட்டார். ஆனால் இங்கே சிலர், இவரை விட கேவலமாக சொந்த நாட்டையே இழிவாக எழுதியிருக்கிறார்கள். இவர்களை விட பில் கேட்ஸ் பரவாயில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 13:01

செய்திக்கான கருத்தை எழுதுவதை விட தொண்ணூறு சதவிகிதம் சக வாசகர்களைக் குறை சொல்லியே காலந்தள்ளும் நீங்கள் எப்படி ????


Ravichandran,Thirumayam
டிச 04, 2024 13:03

உங்களை விடவா அவர்கள் தாய் நாட்டை இழிவாக பேசி விடப் போகிறார்கள்? இந்த நாட்டுக்கு சுதந்திரம் வேண்டவே வேண்டாம் என வெள்ளையன் காலில் விழுந்து கெஞ்சிய தேசப் பற்றுள்ளவர்கள் அல்லவா நீங்கள்?


Kumar Kumzi
டிச 04, 2024 10:36

ஓவாவுக்காக ஒரு துண்டுசீட்டு கூமுட்டைக்கு ஓட்டு போடுறோம்ல அதை தான் நாசுக்காக சொல்லுறாரு