உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனியார் துறையில் ராணுவ விமானம் உற்பத்தி: முதல் ஆலை குஜராத்தில் திறப்பு

தனியார் துறையில் ராணுவ விமானம் உற்பத்தி: முதல் ஆலை குஜராத்தில் திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வதோதரா: குஜராத்தில் டாடா - ஏர்பஸ் விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ஜெஷ் இணைந்து தொடங்கி வைத்தனர். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ஜெஷ் முதல்முறையாக 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், மக்களின் பிரமாண்ட வரவேற்புடன், இருவரும் திறந்தவெளி ஜீப்பில் டி.ஏ.எஸ்.எல். வளாகத்திற்கு வந்தடைந்தனர். அங்கு, டாடா - ஏர்பஸ் விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ஜெஷ் இணைந்து தொடங்கி வைத்தனர். வரும் 2026ம் ஆண்டு முதல் 40 சி-295 விமானங்கள் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதன்மூலம், ராணுவ விமானத்தை தயாரிக்கும் இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி ஆலையாக இது அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த விமான உற்பத்தி ஆலையின் மூலம் பாதுகாப்புத்துறையின் திறன் மேம்படுத்தப்படும். இந்தியா - ஸ்பெயின் நாடுகளுக்கு இடையேயான உறவும் வலுப்படுத்தப்படும். இன்று முதல் இருநாடுகளின் கூட்டாண்மைக்கு புதிய திசையை உருவாக்கியுள்ளோம். அதுமட்டுமில்லாமல், மேக் இன் இந்தியாவுக்கும் இது வலிமை சேர்க்கும்.இவ்வாறு அவர் கூறினார். அதேவேளையில், 'இந்தியாவின் பாதுகாப்புத்துத் துறையை நவீனமயமாக்குவதற்கும், தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இது கூடுதல் பங்களிப்பை வழங்கும். குறிப்பாக, குஜராத் இந்தியாவின் முன்னணி உற்பத்தி மையமாக திகழும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்,' என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ஜெஷ் கூறினார். டாடா - ஏர்பஸ் ஆலையின் மூலம் மொத்தம் 56 சி 295 ரக போர் விமானங்கள் தயார் செய்யப்பட இருக்கிறது. அதில், 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து டெலிவரி செய்யப்படும். எஞ்சியுள்ள 40 போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அப்பாவிராவ்
அக் 28, 2024 22:01

எல்லா மாநிகங்களுக்கும் முக்கியத்துவம் குடுக்கறோம் ஹை. ஜெய்சங்கர் போல்ரஹா ஹை. .


Ramesh Sargam
அக் 28, 2024 19:54

மத்திய அரசின் சிறப்பான செயல் இது. எதிலும் தன்னிறைவு. எங்கும் Make In India திட்டம். வாழ்க இந்திய நாடு. வீழ்க வெளிநாட்டு எதிரிகள் மற்றும் உள்நாட்டு தேசதுரோகிகள்.


சாண்டில்யன்
அக் 28, 2024 19:21

பாகிஸ்தானுக்கு பக்கத்தில் போர்விமானம் உற்பத்தி


duruvasar
அக் 28, 2024 19:19

இன்னும் சதகம் போட்டு.அழுடா . பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை எல்லோரையும் இந்த ஒப்பாரியில் இழுத்து விடு. . இடை இடையே தகர முத்துதுவையும் பக்கத்துல வெச்சிக்கோ.


சாண்டில்யன்
அக் 28, 2024 16:23

செல்வம் செழித்தோங்கியபோது பெருங்கனவு வந்தது திட்டத்துக்கு அரசாங்க அனுமதி வேண்டுமே அந்த அதிகாரம் படைத்தவர்கள் நமக்கு நெருக்கம்தானே என்று எண்ணி அணுகினால் விரிவான திட்ட அறிக்கை கேட்டவுடன் மொத்த கோப்பையும் தந்தால் அங்கே வந்தது வினை அதிகாரம் படைத்தவர்கள் அந்த திட்டத்தை தங்கள் பூமியில் நிறைவேற்றிக் கொண்டார்கள் இன்று உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே உதட்டில் உறவாடாடா தாண்டவக்கோனே என்று என்றோ எவனோ பாடி வைத்ததை இன்று நினைவு கூறுவோம்


hari
அக் 28, 2024 17:42

என்னமோ சொல்றீங்க உங்களுக்கு மட்டும் புரிஞ்சா சரி தாண்டவகோனே


சாண்டில்யன்
அக் 29, 2024 16:44

சேலத்தில் போட நினைத்த திட்டம் குஜராத்தின் வதோதராவுக்கு "ஹைஜாக்" ஆகிவிட்டது.


vnatarajan
அக் 28, 2024 15:11

ஏன் போயிங்கொடும் கூட்டு சேர்ந்து ஒரு கம்பெனி அதானி போயிங் என்று ஆரம்பிக்கலாமே.


S S
அக் 28, 2024 14:12

புல்லெட் டிரெயின், செமி கண்டக்டர் மற்றும் விமானங்கள் தயாரிப்பு கம்பெனி என எல்லாம் வரிசையா குஜராத் மாநிலத்திற்கே செல்கிறதே


hari
அக் 28, 2024 14:55

இங்கே நாங்க எல்லாம் டாஸ்மாக்கில் பிஸியா இருக்கோம்


N Sasikumar Yadhav
அக் 28, 2024 15:22

சாம்சங்கில் சீனக்கைக்கூலிகளான கம்யூனிஸ்டுகள் செய்த அட்டூழியம் தெரியாதா உங்களுக்கு


சாண்டில்யன்
அக் 28, 2024 16:31

உங்க ஆதங்கம் புரிகிறது இங்கே விமான நிலையம் அமைக்கவே கூடாதுன்னு ஆறேழு ஊர்க்காரர்கள் ஐநூறு நாளைக்குமேல் போராடறாங்க அப்புறம் விமானம் தயாரிப்பது எங்கே வங்காள விரிகுடாவிலா அங்கே வந்து நிப்பாங்க மீனவர்கள் சரி ஆகாயத்திலா நம்ம ஊர்க்காரர்தான் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக வந்தார் கொல்லுப்பட்டறை ஆரம்பிக்க சொன்னார் பட்டுகோட்டைக்காரர் ஜனாதிபதியாகவே வந்தார் அப்போ இருந்ததுதான் நல்லாட்சின்னு இன்னைக்கும் கூவிக் கொண்டிருக்கிறோம்


Suppan
அக் 28, 2024 16:45

அங்க இந்த கமிஷன் விவகாரம் கிடையாதே . நம்மாளுக்கு கை அரிக்குமே.


சாண்டில்யன்
அக் 28, 2024 19:02

ஸ்டாலின் கையில் நிதியை கொடுத்தால் மொத்தமா ஏப்பம் போட்டுடுவாருன்னா டில்லி நிதி வரும் முன்பே சென்னை மெட்ரோ வேலைகளை பலரும் டெண்டர் எடுத்துள்ளார்கள் எல்லாம் இனாமாக செய்கிறார்களோ? வேலை எப்படி வேகா வேகமா நடக்கிறதுன்னு சுப்பன் விளக்கினா நாமும் தெரிஞ்சுக்கிட்டு புத்திசாலியாகிடலாம்.


Loganathan Kuttuva
அக் 28, 2024 13:52

விமான உற்பத்தி ஒரு முக்கியமான சிறப்பு நிகழ்ச்சி .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை