உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் யு.பி.ஐ., சேவை இலங்கை , மொரஷியஸ் நாடுகளில் நாளை துவக்கம்

இந்தியாவின் யு.பி.ஐ., சேவை இலங்கை , மொரஷியஸ் நாடுகளில் நாளை துவக்கம்

புதுடில்லி: இந்தியாவின் யு.பி.ஐ., சேவையை இலங்கை , மொரிசியஸ் நாடுகளில் நாளை(12-ம் தேதி) துவக்கி வைக்கப்பட உள்ளது.இந்திய பிரதமர் மோடி, இலங்கைஅதிபர் ரனில்விக்ரமசிங்கே, மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த்ஜக்நாத் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் யு.பி.ஐ., சேவையை துவக்கி வைக்கின்றனர். மேலும் இந்தியாவின் ரூபே கார்டு சேவையும் மொரீஷியசில் வெளியிடப்பட உள்ளது.இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டு இருப்பதாவது: பிரதமர் மோடி வளர்ச்சி அனுபவங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை கூட்டாளர் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் முக்கியத்துவம் அளித்துள்ளார். இலங்கை , மொரீஷியஸ் மக்களின் கலாச்சாரம், மக்களின் தொடர்பை கருத்தில் கொண்டு வேகமான மற்றும் தடையற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவம் மூலம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நாடுகளுக்கிடையே டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தும் என தெரிவித்து உள்ளது.யு.பி.ஐ.,சேவையின் மூலம் இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு பயணிக்கும் இந்திய பயணிகளும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கும் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.கடந்த 2021-ம் ஆண்டில் யு.பி.ஐ.,சேவையை ஏற்றுக்கொண்ட முதல்நாடு பூடான். தொடர்ந்து ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் முழுமையாக அல்லது பகுதியாக தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ