உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானத்தில் ஏசி இயங்காததால் பயணிகள் அவதி: மன்னிப்பு கோரியது இண்டிகோ

விமானத்தில் ஏசி இயங்காததால் பயணிகள் அவதி: மன்னிப்பு கோரியது இண்டிகோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் இருந்து வாரணாசி வந்த இண்டிகோ விமானத்தில் ஏசி செயல்படாததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியது.விமானத்தில் பயணிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், அது சொகுசு ஆனதாக இருக்கும் என பலரும் எண்ணிக் கொண்டு உள்ளனர். ஆனால், சில நேரங்களில் அப்படி அமைவது கிடையாது. அதில், ஒன்றாக, கடந்த 5ம் தேதி தேசியத் தலைநகர் டில்லியில் இருந்து உ.பி.,யின் வாரணாசிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏசி செயல்படவில்லை. ஊழியர்களால் அதனை சரி செய்ய முடியவில்லை. இதனால் பயணிகள் வியர்த்து கொட்டியதால் கடும் அவதிக்குள்ளாகினர். சிலர் கைகளில் இருந்த புத்தகங்களை வைத்து விசிறி கொண்டனர். ஒருவர் ஏசியை சரி செய்ய முயன்றும் அது பலனளிக்கவில்லை. இதனால், ஊழியர்களுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.விமானத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அவதியை, பயணிகள் 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் பதிவிட துவங்கினர். கருத்துகளாகவும், புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் வெளியிட்டனர். இதனையடுத்து இண்டிகோ நிறுவனம், பயணிகளிடம் மன்னிப்பு கோரி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வைகுண்டேஸ்வரன்
செப் 07, 2024 20:38

அங்கே ஏர் இந்தியா வை, அடிமாட்டு விலைக்கு வாங்கிய சங்கி டாட்டா, 15, 20 விமான சேவைகளை ஊத்தி மூடிட்டார். அப்போ எதுவும் பேசாதவர்கள் இப்போ ஏன்? அதுவும், "யாராவது கேஸ் போடுங்க, somebody file a case னு தூண்டி வுட்டு, இவிங்க பில்டர் காபி குடிச்சுண்டு அதைப் படித்து ரசிக்கறதுக்கா?


சமூக நல விரும்பி
செப் 07, 2024 19:37

தொழில் நுட்ப கோளாறு என்றால் ஒன்றும் செய்ய முடியாது. விசாரணை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும்


gopalakrishna kadni
செப் 07, 2024 18:31

மன்னிப்பு கேட்டா போதுமா. எதெதுக்கெல்லாம் காசு வாங்குறாங்க. இதுக்கு முழு பணம் திருப்பி கொடுக்க வேண்டும். யாராவது கேஸ் போடுங்க


R S BALA
செப் 07, 2024 17:46

தொழில் நுட்ப கோளாறு ஏசியோடு போச்சுன்னு சந்தோஷபடுங்கய்யா..நடந்தது நடுவானில் வேறு கோளாறு ஏற்பட்டுஇருந்தால் நிலைமை என்னாகியிருக்கும் தலைக்குவந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு பெருமுச்சுவிடமா ஊழியர்கூட சண்டை போடலாமா சிப்சுகளா


chennai sivakumar
செப் 07, 2024 17:13

Indigo shoukd return 50% of the airfare. Somebody should fike a case in consumer court


அஞ்சுகன்
செப் 07, 2024 17:04

நமக்கும் இந்த விமானக்.கம்பெனிகளை உட்டா வேற மாற்று இல்லை. கேட்டா வேற நாடுக்கு போயிடுன்னு கமெண்ட் வரும். ஜன்னல் கதவை திறந்து வெச்சு பாருங்க.


அப்பாவி
செப் 07, 2024 17:01

இருக்கறதை சரியா ஓட்ட முடியாதவங்க... இன்னும் 450 வாங்கப்போறாங்களாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை