உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுவானில் இண்டிகோ விமானம் மீது மோதிய பறவை: நாக்பூரில் அவசர தரையிறக்கம்

நடுவானில் இண்டிகோ விமானம் மீது மோதிய பறவை: நாக்பூரில் அவசர தரையிறக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: பறவை மோதியதால் 272 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம், நாக்பூருக்கே திருப்பி அனுப்பப்பட்டது. நாக்பூரில் இருந்து கோல்கட்டாவுக்கு இண்டிகோ விமானம் 6E812 புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 272 பயணிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது, அதன் மீது பறவை மோதியது.இதில் விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் கோல்கட்டா செல்லாமல் மீண்டும் நாக்பூருக்கு திருப்பி விடப்பட்டது. அவசர, அவரசமாக விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். அதன் பின்னர், விமான நிலைய பாதுகாப்புக் குழுவினர் விமானத்தை ஆய்வு செய்த போது அதன் முன்பகுதி சேதம் அடைந்திருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை