உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திரா எங்களை சிறைவைத்தார்; ஆனால் அவமதித்தது இல்லை: சொல்கிறார் லாலு

இந்திரா எங்களை சிறைவைத்தார்; ஆனால் அவமதித்தது இல்லை: சொல்கிறார் லாலு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ‛‛ முன்னாள் பிரதமர் இந்திரா எங்களை சிறையில் அடைத்தார். ஆனால், அவமதித்தது கிடையாது '', என பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் கூறியுள்ளார்.இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா அமல்படுத்திய அவசரநிலைக்கு எதிராக ஜெய்பிரகாஷ் நாராயண் அமைத்த குழுவின் கன்வீனராக நான் இருந்தேன். ‛மிசா' சட்டத்தின் கீழ் 15 மாதம் சிறையில் அடைக்கப்பட்டேன். அவசர நிலை பற்றி இன்று எத்தனை பாஜ., அமைச்சர்கள் பேசுகின்றனர் என எனக்கு தெரியாது. பிரதமர் மோடி, நட்டா மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் சுதந்திரம் பற்றி நடத்தும் பாடத்தை நான் கேட்டது கிடையாது.இந்திரா எங்களை சிறையில் அடைத்தார். ஆனால், எங்களை அவமதித்தது கிடையாது. அவரோ அல்லது அவரது அமைச்சரவையில் உள்ளவர்களோ எங்களை தேசவிரோதிகள் என்றோ தேசப்பற்று இல்லாதவர்கள் என்றோ திட்டியது இல்லை. நமது அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் பெருமையை அவமதிக்க அவர் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. 1975 ம் ஆண்டு, நமது ஜனநாயகத்தில் ஒரு கறை. ஆனால், 2024 ல் எதிர்க்கட்சிகளை மதிக்காதவர்கள் யார் என்பதை மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அந்த பதிவில் லாலு பிரசாத் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

saiprakash
ஜூலை 01, 2024 13:13

பிஜேபி யில் இருக்கின்றவர்கள் எல்லாம் உத்தமனுங்க போல ....


tmranganathan
ஜூலை 01, 2024 07:22

தனது ஒன்பது மக்களுக்காக 900 கோடி மக்கள் பணத்தை சுருட்டிய லல்லு.


gopal KRISHNAN
ஜூன் 30, 2024 15:29

இவரை இந்திரா..அவசர நிலை பிரகடனம் செய்த பொழுது..மிசா சட்டத்தில் கைது செய்தார். இவர் மிசா வில் சிறையில் இருந்த பொழுது இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.. அநத குழந்தைக்கு இவர் சூடிய பெயர்..மிசா தேவி. மிசா சட்டத்தில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சிறையில் அடைக்க பட்டார் ஆனால் இந்திரா காந்தி.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை தனது மகன் ராஜிவ் காந்தி போல் அன்புடன் நடத்தினார் அந்த நன்றிக்கடன் காரணமாகவே தீ மூ க..காங் கூட்டணி இன்றும் தொடர்கிறது என் நன்றி கொண்டார்.. திருவள்ளூர் வழியை பின்பற்றி வருகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்


Ramani Venkatraman
ஜூன் 30, 2024 10:11

மீசை இருந்தால்தானே மண் ஒட்டும்.. ஆனா மாட்டுச்சாணி எப்படி இருந்தாலும் ஒட்டும்??


பேசும் தமிழன்
ஜூன் 30, 2024 00:25

இந்திரா wnkqlaol கைது செய்யவே இல்லை...... சாப்பிட தான் அழைத்து சென்றார்.... இப்படி எதையாவது அடித்து விட வேண்டியது தானே ???


kumarkv
ஜூன் 29, 2024 22:13

கோத்ரா ரயில் எரிப்பு முஸ்லிம்கள் செயல். அதை விபத்து என்று கூறியவர் இவர்.


ஆரூர் ரங்
ஜூன் 29, 2024 21:56

எருமை மாட்டு தீவனத்தில் திருடி திருடி தோலே எருமைத்தோல் ஆகிவிட்டது.


Jai
ஜூன் 29, 2024 21:15

இந்தியாவின் பெயரைக் கெடுத்த மாபெரும் ஊழல்களில் முக்கியமானது 2ஜி ஊழல் அதற்கு அடுத்தது லல்லு செய்த மாட்டுத்தீவன ஊழல் தான்.


Venkatasubramanian krishnamurthy
ஜூன் 29, 2024 20:50

நெருக்கடி கால பதினைந்து மாத சிறை அனுபவம்தான் இப்போதைய கால்நடை தீவன ஊழல் சிறை அனுபவங்களை தாங்க உதவுகிறது. அந்த அடியைத் தாங்கினபிறகு எனக்கு மத்ததெல்லாம் சாதாரணம்னு சொன்ன நடிகர் வடிவேலு ஞாபகத்துக்கு வர்றாரு. செஞ்சோற்றுக் கடன் போல சிறைச்சாலை அனுபவத்துக்கு இந்திராவுக்கு நன்றி சொல்லத்தானே தோணும்.


RAJ
ஜூன் 29, 2024 20:48

மாட்டு தீவனத்தை தின்னுட்டு உயிர் வாழ்த்துக்கிட்டு இருக்க உங்க குடும்பத்துக்கு இதுயெல்லாம் பெரிய விஷயமா?


மேலும் செய்திகள்