உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வந்தார் இந்தோனேசியா அதிபர்

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வந்தார் இந்தோனேசியா அதிபர்

புதுடில்லி: டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியன்டோ இந்தியா வந்தார். வரும் 26ம் தேதி தலைநகர் டில்லியில் நாட்டின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கொண்டாட்டத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று, முதல்முறையாக 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி, டில்லி விமான நிலையம் வந்தடைந்த இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோவை மத்திய அமைச்சர் பபித்ரா மர்ஹெரிட்டா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இன்று மாலை தாஜ் ஓட்டலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து, ராஷ்டிரிய பவனில் நாளை (ஜன.,25) காலை 10 மணிக்கு நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ பங்கேற்கிறார். இந்திய சுற்றுப்பயணம் குறித்து இந்தோனேசிய அதிபர் கூறுகையில், 'இந்தியாவின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றேன். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடியை சந்திக்கிறேன். அப்போது, பாதுகாப்பு, கடல்சார் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாடு குறித்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்த உள்ளேன்', என்றார். இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ மலேசியா புறப்பட்டு செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sridhar
ஜன 24, 2025 10:39

இந்திய பயணத்தை முடித்தவுடன் பாகிஸ்தான் செல்வதாக இருந்ததே? மாற்றிக்கொண்டாரா?


அப்பாவி
ஜன 24, 2025 10:34

சும்மாவா? ராணுவ தளவாடம் வாங்கறாங்களே


Amar Akbar Antony
ஜன 24, 2025 10:02

இந்த சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். _ கட்சி தலைவரை சந்திக்கவில்லை? ஒஹ்ஹஹ்.. திஸ் ஸ் மோடி சமத்துவம் உரிமை மரியாதை இவேயெல்லாம் காலஞ்சென்ற மண் மோகன் சிங்கின் காலத்தில் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை