உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் இடைவிடாமல் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா முறித்துக் கொண்டுள்ளது.இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, சட்லெஜ், பியாஸ், ரவி ஆகிய மூன்று நதிகளும் முற்றிலும் இந்தியாவுக்கு சொந்தமானவை. அவற்றில் வரும் நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகளும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த நதிகளில் வரும் தண்ணீரை இந்தியா முற்றிலும் பயன்படுத்த முடியாது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=syk58g1c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குடிநீர் வினியோகம், பாசனம், நீர் மின்சார உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். பெரிய அளவில் அணைகள் எதுவும் கட்டி இந்த மூன்று நதிகளின் நீரை சேகரிக்கக்கூடாது. இந்த நதிகளில் எந்த அளவு இந்தியா தண்ணீர் பயன்படுத்தலாம் என்பதற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலம் வரை, இந்த நதிகளில் இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவாகவே இந்தியா பயன்படுத்தி வருகிறது. உலக வங்கி மத்தியஸ்தம் செய்து ஏற்படுத்திய இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம், இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த 1965, 1971 போர்கள், கார்கில் போர் ஆகியவற்றை கடந்தும் செயல்பாட்டில் இருந்தது. மும்பையில் 26/ 11 தாக்குதல் நடந்த நிலையிலும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா தொடவில்லை. இதற்கு பாகிஸ்தானிய விவசாயிகள் பாதிக்கப்படுவர், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற மனிதாபிமான அடிப்படையே காரணம். ஆனால் அமைதிக்கு திரும்பி கொண்டிருக்கும் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற சம்பவத்தை தொடர்ந்து, முதல்முறையாக இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளதன் மூலம், மேற்கு நோக்கி பாயும் மூன்று நதிகளிலும் தண்ணீரை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க உள்ளது. மூன்று நதிகளிலும் எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் திருப்பி விடப்படும். இந்தியாவின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானில் குறைந்தது இரண்டு மாநிலங்களில் குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.1960ம் ஆண்டு கராச்சியில் கையெழுத்திடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம், 65 ஆண்டு காலம் செயல்பாட்டில் இருந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் செயல்படுத்த, நிரந்தர சிந்து நதி நீர் ஆணையம் செயல்பாட்டில் உள்ளது. ஒப்பந்தம் அமல் செய்வதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இரு தரப்பினரும் உலக வங்கி மேற்பார்வையிலான சர்வதேச நடுவர் மன்றத்தை அணுக முடியும். அதன்படி பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியா மீது சில முறை புகார் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

venugopal narayanan
ஏப் 25, 2025 09:34

correct step..... if pak supported terrorism reached a stage where innocence becom target , why to have a sympathetic approch . PAKneed to come down and our ploiticians think of every indian life . not just look in to their political profit .... Armedm=forces are there to save the country but equally our politicians must come united to fight . vote bank culture and regional politica eroding the oneness among us. More serious and strong measures are required to stop pak and get back POK . Let it be the last and final loss of human life in our soil .


Appan
ஏப் 24, 2025 17:47

The western rivers are not just shared rivers. They are Pakistan’s primary source of water. In the long run, there may be reforms or natives. But in the here and now, there is no substitute. These rivers sustain lives, livelihoods, and landscapes across the country. Pakistan can simply not afford to let it become collateral in a political fight. Thus, the flows must continue. Not out of goodwill, but because the consequences of stopping them are too great for either country to bear.


HoneyBee
ஏப் 24, 2025 16:44

இதை கூட தவறு என்று சொல்லி ஸ்டிக்கர் ஒட்ட சில‌ கேடு கெட்ட ஜென்மங்கள் ஓடி வரும்


Dharmavaan
ஏப் 24, 2025 16:32

இந்தியாவில் பாகிஸ்தானை/ முஸ்லிம்களை ஆதரிக்கும் துரோகிகளை முதலில் ஒழித்துக்கட்ட வேண்டும்


Dharmavaan
ஏப் 24, 2025 16:30

இதை செயல்படுத்துவதில் இப்போதுசிக்கல் உள்ளதா


B MAADHAVAN
ஏப் 24, 2025 14:40

தற்போதைய மோடிஜி அரசிற்கு ஜெய்சங்கர், அஜித் தோவல் போன்ற திறமைமிக்க அனுபவசாலிகள் ஆலோசனைகள் தர துணை நிற்பது கூடுதல் பலம். தற்போதைய சூழலில் மத்திய அரசு எடுக்கும் சரியான நடவடிக்கைகளை குறை கூறாமல் வாய் மூடிக் கொண்டு மௌனமாக இருப்பது தான், குறை கூறும் எல்லா பஞ்சாயத்து அரசிற்கும் நல்லது.


Anbuselvan
ஏப் 24, 2025 13:47

This is non-violent approach. The term non-violence has lost its significance now-a-days. People dont just care. If a non-violanist sits on a fast to death and dies for a good cause, no one cares. Though this is dangerous situation, the popular saying occupies drivers seat nos "if you scratch my back I will scratch your back very badly". This is what should happen as per current days situation. No one hears if the other party is polite or diplamatic.


Venkateswaran Rajaram
ஏப் 24, 2025 13:32

கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக, தொடர்ந்து நம் மீது தீவிரவாதிகளை கொண்டு proxy war நடத்திக்கொண்டு இருக்கும் பாகிஸ்தானை என்ன செய்து இருக்கிறோம் இதுவரை... பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் அப்படியே ஆக்ரமிப்பில்தான் இருக்கிறது.... அவன் ஆக்ரமிப்பு காஷ்மீரில், தீவிரவாத பேக்டரி வைத்துக்கொண்டு நடத்திக்கொண்டு தீவிரவாதிகளை பன்றிகள் குட்டிபோடுவதை போல உற்பத்தி செய்து அனுப்பிக்கொண்டு நமது மக்களை , நமது ராணுவ வீரர்களை கொன்று குவித்துக்கொன்டே இருக்கிறான்.. நமது உச்சகட்ட கோபம் வாய் வார்த்தைகள் மட்டுமே.. உச்சச்சக்கட்ட கோபம்ன்னா என்ன என்பதை நாம் இஸ்ரேலை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்.. அடித்து துவைத்து துவம்சம் செய்து, இனி எழவே முடியாது என்ற அளவிற்கு செய்து இருக்கிறது காசாவை... அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு.. அமெரிக்கா பாகிஸ்தானில் புகுந்து பின்லேடனை அலேக்கா தூக்கி கொன்று தூள் தூளாக நசுக்கி கடலில் கரைத்தது.. அது உச்சகட்ட கோபம்.. நமது உச்சகட்ட கோபம் தண்ணீரை நிறுத்துவது, மின்சாரத்தை துண்டிப்பது... வாய் வார்த்தைகளால் கண்டனம் செய்வதுடன் ஒவ்வொரு முறை தாக்குதலுக்கு உள்ளாகும் போதும் முடிந்து விடுகிறது.. அவன் நீ ஹிந்துவா என்று.. கழற்றி பார்த்து சுட்டுக்கொல்கிறான்.. நாமும் கண்ணுக்கு கண்.. பல்லுக்கு பல் என்று பாகிஸ்தானுக்கும் புகுந்து துவம்சம் செய்து துல்லிய தாக்குதல்கள் நடத்தி பாகிஸ்தான் ராணுவ தலைமை உள்பட அனைவரையும் கொன்று குவித்தால் அது உச்சகட்ட கோபம்.... மற்றவை எல்லாம் வீண்..


பாமரன்
ஏப் 24, 2025 14:29

அருமையான கருத்து... இந்திய அரசியல்வியாதிகள் இந்த பிரச்சினை ஆறிவிடாமல் தூபம் போட்டு வைப்பதிலேயே இதுவரை கவனம் செலுத்தி வந்திருக்கின்றனர்.


Rasheel
ஏப் 24, 2025 12:36

இது இந்திய அரசின் சிறப்பான நடவடிக்கை. 60% பாகிஸ்தானிய பொருளாதாரம், சிந்து மற்றும் துணை நதிகளை சார்ந்து உள்ளது. கோதுமை, அரிசி, பருத்தி, துணி உற்பத்தி ஏற்றுமதி, உணவு பொருள் ஏற்றுமதி இதை சார்ந்துள்ளது. இந்த நதி நீர் தடை மூலம் பாகிஸ்தானிய பஞ்சாப் வறட்சியில் தள்ளப்படும். ஏழ்மை தலை விரித்து ஆடும். பாகிஸ்தானிய பஞ்சாபி மாநிலத்திற்கும் சிந்து மாகாணத்திற்கு ஏற்கனவே நீரை பகிர்ந்து கொள்வதில் மிக பெரிய பிரச்சனை உள்ளது. பாகிஸ்தானை இது பல பிரிவுகளாக பிளவுபடுத்தும்.


veeramani hariharan
ஏப் 24, 2025 11:55

Good step taken by our Government. But, again more terrorists will be d. Simultaneously military action should be taken to remember years to come


சமீபத்திய செய்தி