உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல் டெஸ்டில் இந்தியா அபார பந்துவீச்சு: 246 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்அவுட்

முதல் டெஸ்டில் இந்தியா அபார பந்துவீச்சு: 246 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்அவுட்

ஐதராபாத்: முதல் டெஸ்டில் இந்திய பவுலர்கள் அசத்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இங்கிலாந்து அணிக்கு இந்திய பவுலர்கள் தொல்லை தந்தனர். அஷ்வின் 'சுழலில்' டக்கெட் (35), கிராலே (20) சிக்கினர். ரவிந்திர ஜடேஜா பந்தில் போப் (1), ஜோ ரூட் (29) அவுட்டாகினர். அக்சர் படேல் பந்தில் ஜானி பேர்ஸ்டோவ் (37), பென் போக்ஸ் (4) சரணடைந்தனர். பும்ரா 'வேகத்தில்' ரேஹன் அகமது (13) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (70) அரைசதம் கடந்தார். ஹார்ட்லி (23), மார்க் உட் (11) போல்டாகினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் அஷ்வின், ஜடேஜா தலா 3, அக்சர், பும்ரா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

ஜெய்ஸ்வால் அரைசதம்

பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து அசத்தினார். ரோகித் 24 ரன்னில் கேட்சானார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் (76), சுப்மன் கில் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kalyan Singapore
ஜன 26, 2024 02:54

அஸ்வினுக்கு உலகக்கோப்பையில் மற்றும் அநேக ஆட்டங்களிலும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தால் அவர் என்றோ கும்ப்ளேயின் சாதனையை குறைந்த ஆட்டங்களிலேயே முறியடித்திருப்பார் . பாட்டிங்கில் சத்தம் மற்றும் பௌலிங்கில் 10 wicket எடுத்த ஒரே இந்தியர் ( உலகில் இரண்டாவது விளையாட்டு வீரர் ) என்ற பெருமையை அவர் அடைய விடாமல் விராட் கோஹ்லி இரண்டாவது இன்னிங்சில் 3 wicket எடுத்த பிறகும் ( முதல் இன்னிங்சில் 5 wicket எடுத்திருந்தார் ) அவருக்குபந்து வீச்சு கொடுக்காதது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது .நாம் வென்றோம் ஆனால் அஸ்வின் உலக record பட்டியலில் இடம் பெறவில்லை


Ramesh Sargam
ஜன 26, 2024 00:40

ஒரு போட்டியில் சரியாக விளையாடுவார்கள். ஒரு போட்டியில் சொதப்புவார்கள். அதுதான் கிரிக்கெட்.


Jayaraman Pichumani
ஜன 25, 2024 21:18

இந்தத் தொடரின் முடிவில் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் எடுத்து சாதிப்பார் என்று நம்புகிறேன்.


Bye Pass
ஜன 25, 2024 22:53

யானையின் பலம் எதிலே தும்பிக்கையில் .....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை