உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விபத்து இழப்பீடு வழங்காத காப்பீடு நிறுவனங்களுக்கு சீல்

விபத்து இழப்பீடு வழங்காத காப்பீடு நிறுவனங்களுக்கு சீல்

ஷாஜகான்பூர்: உத்தர பிரதேசத்தில், 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் விபத்து இழப்பீடு தொகையை வழங்கவில்லை என, ஷாஜகான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் காப்பீடு செலுத்தியவர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 48 லட்சம் ரூபாயும், ஓரியண்டல் இன்சூரன்ஸ நிறுவனம் 1 கோடியே 10 லட்சம் ரூபாயும், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் 74 லட்சம் ரூபாயும் நிலுவை வைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட காலத்திற்குள் இழப்பீட்டு தொகையை வழங்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்நிறுவனங்கள் உத்தரவை பின்பற்றவில்லை.நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத மூன்று காப்பீட்டு நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க, மாவட்ட நீதிபதி தர்மேந்திர பிரதாப் சிங் உத்தரவிட்டார். இதன்படி, ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகங்களுக்கு, போலீசார் முன்னிலையில் நேற்று சீல் வைக்கப்பட்டது; யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kalyanaraman
மே 23, 2025 08:07

சபாஷ் சரியான தண்டனை தான். இதிலும் தவறும் பட்சத்தில் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் லைசென்ஸ் ஐ கேன்சல் செய்யும் அளவுக்கு இருக்க வேண்டும்.


Varadarajan Nagarajan
மே 23, 2025 07:29

இதேபோல் பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கும் உரிய நஷ்டஈடை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கவில்லை. எனவே கனம் நீதிபதியவர்கள் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து அனைத்து காப்பீடு நிறுவனங்களுக்கும் பொருந்துமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாய் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன்


Kasimani Baskaran
மே 23, 2025 04:05

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீதிமன்றத்துக்கு கட்டுப்பட்டவை அல்ல என்று நினைக்கத்தோன்றுகிறது.. ஒரு வேளை தமிழக அரசு போல பணம் இல்லையோ என்னவோ... இதே போல தமிழக அரசு மீது பலர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தும் கூட ஒன்றும் நடக்கவில்லை. உச்ச நீதிமன்றம் எங்கள் நீதிமன்றம் என்று வேறு சொல்வது போல இருக்கிறது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை