உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடைக்கால பட்ஜெட்; அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

இடைக்கால பட்ஜெட்; அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கும் நிலையில், நாளை (ஜன.,30) அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், வரும் பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் ஆறாவது மத்திய பட்ஜெட்டை வரும் 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் துவங்குகிறது. கூட்டத் தொடர் துவங்கும் நிலையில், நாளை(ஜன.,30) அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

g.s,rajan
ஜன 29, 2024 22:19

அல்வாவை நல்லாக் கிண்டி இருக்காங்க,அப்புறமா எல்லாருக்கும் கொடுப்பாங்க ....


அப்புசாமி
ஜன 29, 2024 20:01

பெருசா ஒத்துமையா பட்ஜெட் போட்டு நாட்டை முன்னேத்துற மாதிரி நினைப்பு. கிண்டற அல்வாவை நீங்களே கிண்டிக்கோங்க. நல்லா வந்தாலும் வரலேன்னாலும் நீங்களே மெடல்.குத்திக்கோங்க.


ஆரூர் ரங்
ஜன 29, 2024 17:15

தேர்தல் ஆண்டில் யாரும் பெரிய திட்டங்களை அறிவிப்பதில்லை. இது இடைக்கால பட்ஜெட் மட்டுமே. விவசாயம், ரேஷன் போன்றவற்றிற்கு சிற்சில சலுகைகளை மட்டுமே அளித்து???? கூட்டணிக் கட்சிகளுக்கு உற்சாகமளிக்கலாம். அவ்வளவுதான்.


மேலும் செய்திகள்