உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளின் சதியை முறியடித்த ஐபிஎஸ் அதிகாரி: குவிகிறது பாராட்டு

பயங்கரவாதிகளின் சதியை முறியடித்த ஐபிஎஸ் அதிகாரி: குவிகிறது பாராட்டு

புதுடில்லி: காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டர் விவகாரத்தை துவக்கிய விசாரணை தான், வெடிமருந்து பறிமுதல் செய்து பயங்கரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்த விசாரணைக்கு முக்கிய காரணமாக இருந்த சந்தீப் சக்கரவர்த்தி என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுத்து பயங்கரவாதிகள் போஸ்டர் ஒட்டுவது வழக்கமானதாக இருந்தது. இருப்பினும், இந்த முறை இந்த விவகாரத்தை 2014ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் சக்கரவர்த்தி சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொன்ற ஆப்பரேஷன் மகாதேவ் நடவடிக்கைக்கு தலைமை ஏற்ற இவர், போஸ்டர் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார். இதில் போஸ்டரை ஒட்டிய 3 பேர் சிக்க அவர்கள் அளித்த வாக்குமூலம் தான் பயங்கரவாத நெட்வொர்க்கின் பின்னணியை அம்பலப்படுத்தியது. விசாரணை டில்லி, ஹரியானா, உ.பி., வரை நீண்டு 2900 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதன் பின்னணியில் இருந்த டாக்டர்களை கைது செய்ய வைத்தது.யார் இவர்சந்தீப் சக்கரவர்த்தி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ராம கோபால் ராவ் ஆந்திர அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் ரங்கம்மாவும் சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.சந்தீப் சக்கரவர்த்தி கர்னூல் மாவட்டத்தில் உள்ள மான்டசரி பள்ளியில் ஆரம்ப கல்வியை முடித்தார். பிறகு 2010 ல் கர்னூல் மருத்துவ கல்லூரியில் டாக்டர் பெற்றார். 2010 - 2011 வரை பயிற்சி மருத்துவராக இருந்தார். பிறகு 2014 ல் ஐபிஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

காஷ்மீரில் பணி

காஷ்மீரில் சந்தீப் சக்கரவர்த்தி கேந்திர முக்கியம் வாய்ந்த இடங்களிலும், முக்கிய பொறுப்புகளிலும் பணியாற்றி உள்ளார்.உரி மற்றும் சோபோரில் உள்ளிட்ட பதற்றம் நிறைந்த இடங்களில் பணியாற்றியுள்ளார்பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய பாரமுல்லாவில் நடவடிக்கை குழு எஸ்பி ஆகவும்பாதுகாப்பு சவால்கள் நிறைந்த ஸ்ரீநகர் தெற்கு, ஹன்ட்வாரா, குப்வாரா, குல்காம், ஆனந்த்நாக் மாவட்ட எஸ்பி ஆகவும் பணியாற்றி உள்ள இவர், கடந்த ஏப்.,21 முதல் ஸ்ரீநகர் மூத்த எஸ்பி(SSP) ஆகவும் பணியாற்றி வருகிறார்.ஆனந்த்நாக், குப்வாரா, குல்காமில் பதவி வகித்த போது பல முக்கிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளித்ததுடன், பயங்கரவாத நடவடிக்கைகளையும் முறியடித்தார். போலீஸ் மற்றும் அப்பாவி மக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றார்.' ஆப்பரேஷன் ஸ்பெஷலிஸ்ட்' என்ற பெயர் சந்தீப் சக்கரவர்த்திக்கு உண்டு. திட்டமிடுதல், உடனடியாக, ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்பது இவரது பாணி. இதற்கு உதாரணம் தான் போஸ்டர் விவகாரம் என்கின்றனர் போலீசார். சிறிய அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட இந்த விவகாரம் விசாரணைக்கு பிறகு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் சதி, வெடிமருந்து பறிமுதல் வரை சென்றுள்ளது.

விருதுகள்

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்காக வீரதீர செயல்களுக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கத்தை ஆறு முறையும்ஜம்மு காஷ்மீரில் போலீசின் பதக்கம் நான்கு முறையும்இந்திய ராணுவத்தின் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Natarajan Ramanathan
நவ 15, 2025 21:54

தீவிரவாதியும் டாக்டர் ....அதை முறியடித்தவரும் டாக்டர்.... ஒரே வித்யாசம் அவர்களின் மதம்தான்.


S. Krishnan
நவ 14, 2025 19:27

ஒரூ பக்கம் டாக்டர் மறு பக்கம் தீவிரவாதி கேவலம்


Gopal
நவ 14, 2025 12:29

வாழ்த்துக்கள்


CHELLAKRISHNAN S
நவ 14, 2025 08:43

surprise. accused are doctors n the police officer who found out the planning is also a doctor. only difference - religion


Tetra
நவ 14, 2025 07:09

ஸுப்ரீம் புரிந்து கொள்ளுமா? இல்ல. ஜாமீன் மேல் ஜாமீன்தானா?


VARUNAMBIGAI TEXTILES
நவ 13, 2025 14:16

மருத்துவம் படித்து பிறகு ஐ.பி.எஸ் என்றால்.. இவர் திறமையானவர் மட்டுமல்ல இவர் ஒழுக்கமானவராக இருக்க வேண்டும். அதனால் இவரை போன்றோரை முன்மாதிரியாக இளைஞர்கள் எடுத்து கொண்டு.. சினிமா ஹீரோக்களை மறக்க வேண்டும்


மணியன்
நவ 13, 2025 08:25

இவரை தமிழக டிஜிபியாக நியமிக்க வேண்டும்.


Sun
நவ 13, 2025 12:33

ஏன் இவர் நேர்மையாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நண்பரே! இங்கு வந்து இவரை கோர்த்து விடப் பார்க்கிறீர்களே?


Balaji
நவ 14, 2025 18:11

மிக சிறந்த கருத்து


Keshavan.J
நவ 13, 2025 07:09

இவரை பற்றிய தகவல்கள் வெளியே ஏன் இது மிக பெரிய தவறு


Kasimani Baskaran
நவ 13, 2025 04:13

முகவரி தவிர - பெயர், தனிப்பட்ட தகவல், குடும்பப்பின்னணி போன்ற தகவல்களை கசிய விடுவது இவருக்கு ஆபத்தில் முடியாதா?


Venugopal, S
நவ 13, 2025 01:04

மூர்க்க முட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் தெரிவிக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை