உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணம் தருவது நலத்திட்டமா?

பணம் தருவது நலத்திட்டமா?

அரசியல் சாசனத்தின் அடிப்படையை பூர்த்தி செய்ய அனைத்து மாநிலங்களிலும் பொருளாதார சமத்துவத்தையும், சமமான வளர்ச்சியையும் உறுதி செய்வது அவசியம். நலத்திட்டங்கள் என்பது தேர்தலின்போது பணம் வழங்குவதன் மூலம் நடைபெறும் ஒன்று அல்ல. முரளி மனோகர் ஜோஷி மூத்த தலைவர், பா.ஜ.,

சட்டவிரோத ஓட்டு வங்கி!

மேற்கு வங்கத்தில், 2004ல் வாக்காளர் தீவிர திருத்த பணிக்கு பின் நடந்த தேர்தலில் தான் முதல்வர் மம்தா பானர்ஜியே வெற்றி பெற்றார். தற்போது அவர் இதை எதிர்க்கிறார். இங்கு போலி வாக்காளர்கள், 13.25 லட்சம் பேர் அடங்கிய பட்டியலை நாங்கள் தேர்தல் கமிஷனிடம் வழங்கியுள்ளோம். சுவேந்து அதிகாரி மே.வங்க எதிர்க்கட்சித் தலைவர், பா.ஜ.,

பேராசை இல்லை!

பீஹாரில் எங்களுக்கு, 29 சீட்டுகளை பிரதமர் மோடி வழங்கினார். அதில், 19ல் வென்றோம். இரண்டு அமைச்சர் பதவிகள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதுவே போதும். துணை முதல்வர் பதவி கேட்கும் அளவுக்கு பேராசை பிடித்தவன் நான் இல்லை. சிராக் பஸ்வான் மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி - ராம் விலாஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !