உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதவில்லையா? கிரிக்கெட் வீரர் மனைவியிடம் கோர்ட் கேள்வி

ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதவில்லையா? கிரிக்கெட் வீரர் மனைவியிடம் கோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, மாதந்தோறும் அளிக்கும் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் தொகை போதவில்லை எனவும், கூடுதல் தொகை அளிக்க உத்தரவிடக்கோரி அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் தாக்கல் செய்த மனு மீது விளக்கம் அளிக்கும்படி முகமது ஷமிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கடந்த 2014ல் ஹசின் ஜஹான் என்பவரை திருமணம் செய்தார். எனினும், அடுத்த நான்காண்டுகளில் ஷமி மீது குடும்ப வன்முறை தொடர்பாக ஹசின் ஜஹான் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து, ஷமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். அப்போது முகமது ஷமி தன் மனைவிக்கு, 50,000 ரூபாயும், மகளுக்கு, 80,000 ரூபாயும் மாதாந்திர ஜீவனாம்சம் வழங்க அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்த ஹசின் ஜஹான், மாதம் 10 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது ஹசின் ஜஹானுக்கு, 1.50 லட்சம் ரூபாய், மகளுக்கு 2.50 லட்சம் ரூபாய் என மொத்தம் 4 லட்சம் ரூபாயை பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் வழங்க கடந்த ஜூலையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக அளிக்கும் 4 லட்சம் ரூபாய் போதாது எனவும், முகமது ஷமியின் வருவாய், அவரது மகளின் எதிர்காலம் மற்றும் தான் அனுபவித்த வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் வைத்து, தனக்கு அளிக்கும் பராமரிப்பு தொகையை அதிகரித்து தர வேண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் ஹசின் ஜஹான் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, 'ஜீவனாம்சம் தொகையாக தற்போது மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் அளிப்பது மிகப்பெரிய தொகை இல்லையா, இது போதவில்லையா? 'இந்த விவகாரத்தில், இருதரப்பும் சமரசம் செய்து தீர்வு காணுங்கள்' என, குறிப்பிட்டதுடன் முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க அரசு நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sarathkumar k
நவ 08, 2025 20:04

ஆண் பாவம் பொல்லாதது


nisar ahmad
நவ 08, 2025 12:42

பேராசை கோர்ட் தலையிட்டு ஜீவனாம்ச தைகையை குறைக்க வேண்டும் அதோடு மாதா மாதம் செலவு கணக்கை சமர்பிக்க சொல்லவேண்டும்.


M Selvaraaj Prabu
நவ 08, 2025 10:49

மனைவிக்கு 1.50 லச்சம், மகளுக்கு 2.50 லச்சம் என மாதம் 4 லச்சம் கடந்த 2014 லில் இருந்து வாங்கி வருகிறார்கள். மாதம் ஒரு லச்சம் சேர்த்து வைத்திருந்தாலே 11 வருடத்தில் சுமார் 130 லச்சத்திற்கு மேல் 1.25 கோடி சேர்த்திருக்கலாம் மகளுக்கு எத்தனை வயது? எதற்கு மகளுக்கு மாதம் 2.50 லச்சம்? அவ்வளவு பணத்தை என்ன செய்கிறார்கள்? அந்த பணத்தை எப்படி செலவு செய்கிறார்கள் என்று கணக்கு கொடுக்க வேண்டும். இந்த அம்மாள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு என 2014 லிலிருந்து என்ன செய்து கொண்டிருக்கினார்கள்? வேறு கல்யாணம் செய்து கொள்ள வில்லையா? ஒரு கிரிக்கெட் வீரரின் விவாகரத்தான மனைவி, மகள் என்ற அந்தஸ்துக்காக வீண் செலவு செய்கிறார்களா? எத்தனையோ கேள்விகள் இதற்கு பதில் கோர்ட்டில் கொடுப்பார்களா?


நிக்கோல்தாம்சன்
நவ 08, 2025 07:21

இதற்க்கு வருமானவரி காட்டுவாரா ?


Rangarajan Cv
நவ 08, 2025 13:32

Subject to IT act provisions .


Ramaraj P
நவ 08, 2025 06:58

ஜீவனாம்சம் கொடுக்க கூடாது என்று நேரு சட்டம் கொண்டு வந்தாரே


ramani
நவ 08, 2025 06:30

அந்த பெண்மணி என்ன தங்கத்தை நீராக்கி குளிப்பாளா? அல்லது தங்கத்தில் தான் சாப்பிடுவாளா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை