உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தின் பெயர் மாறுகிறதா?

மேற்கு வங்கத்தின் பெயர் மாறுகிறதா?

புதுடில்லி: ராஜ்யசபாவில், திரிணமுல் காங்., - எம்.பி., ரீட்டா பிரதா பானர்ஜி நேற்று பேசியதாவது:மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றக்கோரி, 2018ல் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. கடந்த 1947ல், நாடு சுதந்திரமடைந்தபோது, வங்கம் இரண்டாக பிரிக்கப்பட்டு, மேற்கு பகுதிக்கு மேற்கு வங்கம் என்றும் கிழக்கு பகுதிக்கு கிழக்கு பாகிஸ்தான் என்றும் பெயரிடப்பட்டது. அதன்பின், 1971ல், கிழக்கு பாகிஸ்தான், புதிய நாடாக வங்க தேசம் என அறிவிக்கப்பட்டது. தற்போது கிழக்கு பாகிஸ்தான் என இல்லாத நிலையில், மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையிலும் மாநிலத்தின் வரலாறு, கலாசாரம், அடையாளத்தை மெய்ப்பிக்கும் வகையிலும் மாநிலத்தின் பெயரை வங்கம் என மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Barakat Ali
பிப் 05, 2025 10:51

பஸ்ச்சிம் பெங்கால் - மேற்கு வங்கம் என்று இவரே ஒரு பெயரைப் பரிந்துரை செய்தார் .... பிறகு பெங்கால் என்று சுருக்கினார் ....


Anand
பிப் 05, 2025 10:50

மமதாதேஷ் என பெயர் மாற்றம் செய்தால் பேகம் மிகவும் புளங்காகிதம் அடைவார்.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 05, 2025 10:09

இவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டால் இன்றைய மேற்கு வங்கத்தினால் இந்தியாவுக்கு என்ன என்பது அப்பட்டமாகத் தெரிந்துவிடும். ஆம், வங்கம் என்று மாற்றினால் வங்காளிகள் அதை பங்கம் என்றுதான் படிப்பார்கள் உச்சரிப்பார்கள். வங்காள மொழியில் வ என்ற எழுத்து கிடையாது. வைத்தியநாதன் என்பதை பைத்திய நாதன் என்றே கூறுவது வங்க மக்கள் ஸ்டைல்


Kumar Kumzi
பிப் 05, 2025 08:58

.... என்பது பொருத்தமாக இருக்கும்


Dharmavaan
பிப் 05, 2025 07:53

ஜனாதிபதி மோடி அரசு இதை நீராகரிக்க வேண்டும்


Palanisamy Sekar
பிப் 05, 2025 05:31

ஓட்டுக்காக கொண்டுவரப்பட்ட பங்களாதேஷ் மக்கள் நிறைந்த மாநிலம் வங்கம் என்று பெயர் மாற்றம் செய்வதால் அவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்குமென்று மம்தா எண்ணியிருக்கலாம். நாட்டிலேயே அதிக அளவுக்கு பங்களாதேஷ் மக்கள் வாழும் மாநிலமாக மேற்குவங்கம் பெயர் வாங்கியுள்ளது.


Karthik
பிப் 05, 2025 05:30

நாட்டுக்கு இது ரொம்ப முக்கியம்..


J.V. Iyer
பிப் 05, 2025 05:19

நல்லவேளை இவர் எங்கே பங்களாதேசத்துடன் இணையச்சொல்வாரோ என்று பயந்தேன். பங்களாதேஷை பயங்கரவாததேஷ் என்று அழைத்தால் என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை