உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛வேற இடமே கிடைக்கலையா...: தண்டவாளத்தில் குடையுடன் தூங்கிய நபர்: ரயிலை நிறுத்திய டிரைவரின் மனிதநேயம்

‛வேற இடமே கிடைக்கலையா...: தண்டவாளத்தில் குடையுடன் தூங்கிய நபர்: ரயிலை நிறுத்திய டிரைவரின் மனிதநேயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.,யில் பஹ்ரைச் மாவட்டத்தில் தண்டவாளத்தில் குடையுடன் தூங்கிய நபரை பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் அந்த நபர் உயிர் தப்பினார்.உ.பி.,யின் பஹ்ரைச் மாவட்டத்தில் இருந்து பிரதாப்கர்க் நோக்கி பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது, தண்டவாளத்தில் யாரோ படுத்து இருப்பதை தூரத்தில் இருந்து பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். அவரும், ரயில் ஊழியர்களும் கீழே இறங்கி சென்று பார்த்த போது, அங்கு முதியவர் ஒருவர் குடையுடன் தூங்கி கொண்டு இருந்தார். அவரை எழுப்பி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதன் பிறகு ரயில் கிளம்பி சென்றது. ரயில் ஓட்டுநரின் மனிதநேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n96wgkxx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. பலரும் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

N.Purushothaman
ஆக 26, 2024 06:55

ரயில் வருகிற தண்டவாளத்துல தலையை வச்சி தூங்கறதுக்கும் ஒரு தைரியம் இருக்கணும் .....தைரியம் இல்லாத ஒருத்தர் ரயில் வராத தண்டவாளத்தில படுத்து போராடின வரலாறு தமிழகத்துக்கு சொந்தம் ....


Kasimani Baskaran
ஆக 26, 2024 06:01

இரயில் தண்டவாளத்தில் தூங்குமளவுக்கு என்ன பிரச்சினையோ. சமூக ஆர்வலர்கள், சேவகர்கள் இது போன்றோருக்கு உதவினால் புண்ணியமாவது கிடைக்கும்.


Srinivasan Ramabhadran
ஆக 25, 2024 21:42

இரயில் ஓட்டுநர் சரியான நேரத்தில் இரயிலை நிறுத்தி, இவரின் உயிரை காப்பாற்றியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். ஆனால், இதே போன்று வேறு சிலரும் YouTube video எடுத்து அதை சமூக வலைத் தளங்களில் பரப்ப முயற்சிக்கலாம். இது போன்ற மறை கழன்றவர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்


Shekar
ஆக 25, 2024 20:20

எல்லா ட்ரைவர்களிடமும் மனிதநேயம் உண்டு, வேண்டுமென்றே ஏற்றிக்கொல்வதில்லை. இங்கு வண்டி மெதுவாக வந்திருக்கும் நிறுத்தியிருப்பார். 100-120 கிமீக்கு மேல் வரும் வண்டியை ட்ரைவர் நினைத்தாலும் நிறுத்த முடியாது, அது விபத்துக்கு வழி வகுக்கும்


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2024 20:05

ஒரு வேளை உபியை சேர்ந்த மஞ்சள் பையோ?


Ramesh Sargam
ஆக 25, 2024 20:02

விச்சித்திர மனிதர்கள்.


அப்பாவி
ஆக 25, 2024 19:09

மனுசனைக் காப்பாத்துனா மனித நேயம். இவன் மேலே வண்டியை உட்டு அது பெரிய தகராறுல முடியாம இரெததுக்கே டிரைவருக்கு பாரத ரத்னா விருது குடுக்கலாம்.


வாய்மையே வெல்லும்
ஆக 25, 2024 19:03

யமதர்ம ராஜாவுக்கே ஷாக் குடுக்கும் இந்த கிழட்டு ஆசாமிக்கு செம்ம தில்லு தான் போங்க ..


ஆரூர் ரங்
ஆக 25, 2024 18:37

தூக்கம் வந்தா கட்டுஸ் போல ரயில் வராத தாண்டவமா பாத்து போக வேண்டியதுதானே?


புதிய வீடியோ