வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எந்த நட்சத்திரத்தில் எந்த ராசியில் கிரகணம் வரும்? அன்னிக்கி அமாவாசையா? பவுர்ணமியா? கிரகண தர்ப்பணம் யார் யார் செய்ய வேண்டும்னு சொல்லிடுங்க.
இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து பல்வேறு சாதனைகள் சாதித்து வருகிறது
புதுடில்லி: செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் 'புரோபா-3' செயற்கைக்கோள் நவம்பர் 29ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) இணைந்து, விண்வெளியில் செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்க, 'புரோபா-3' என்ற இரட்டை செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது. விண்ணில் இருந்து புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் வகையில் இந்த இரட்டை செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 'புரோபா-3' செயற்கைக்கோள் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கிறது.ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு இன்று அந்த இரட்டை செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. சற்று வித்தியாசமான சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது.சிறப்பு அம்சங்கள் என்ன?
* இந்த இரட்டை செயற்கைக்கோளும் செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கக் கூடிய சக்தி கொண்டவை.* அதிக நீள்வட்ட சுற்றுப்பாதையை இந்த செயற்கைக்கோள் கொண்டிருக்கும்.* சந்திரயான்-4 உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கு உதவியாக இந்த திட்டம் இருப்பதால் இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது. * இந்த நுட்பம் சூரியனின் கரோனாவை (corona) நீண்ட நேரம் கண்காணிக்கும்.
எந்த நட்சத்திரத்தில் எந்த ராசியில் கிரகணம் வரும்? அன்னிக்கி அமாவாசையா? பவுர்ணமியா? கிரகண தர்ப்பணம் யார் யார் செய்ய வேண்டும்னு சொல்லிடுங்க.
இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து பல்வேறு சாதனைகள் சாதித்து வருகிறது