உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்.சி.இ.ஆர்.டி.,யை ஆர்.எஸ்.எஸ்., இயக்குவதாக கூறுவது முட்டாள்தனம்

என்.சி.இ.ஆர்.டி.,யை ஆர்.எஸ்.எஸ்., இயக்குவதாக கூறுவது முட்டாள்தனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''என்.சி.இ.ஆர்.டி.,யை ஆர்.எஸ்.எஸ்., இயக்குகிறது எனக் கூறுவது முட்டாள்தனம். பாடத் திட்டங்களை திருத்தும்படி எங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை,'' என, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் சமூக அறிவி யல் பாடப்புத்தகத்துக்கான தலைவர் பேராசிரியர் மைக்கேல் டானினோ தெரிவித்தார். நாடு முழுதும், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி.,யின் பாடப்புத்தகங்களை பயன்படுத்துகின்றன. இதில், அவ்வப்போது சில திருத் தங்கள், என்.சி.இ.ஆர்.டி., யால் மேற்கொள்ளப்படுகின்றன. திருத்தம் அந்த வகையில், பிளஸ் 2 வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் இருந்து முகலாயர்கள் தொடர்பான சில பகுதிகள் நீக்கப்பட்டன. அதே போல், 7 மற்றும் 8ம் வகுப்பு புத்தகத்திலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து வேண்டுமென்றே முஸ்லிம் மன்னர்களின் குறிப்புகள் நீக்கப்படுகின்றன' என, குற்றஞ்சாட்டின. இந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி.,யின் சமூக அறிவியல் பாடப்புத்தகத்துக்கான தலைவர் பேராசிரியர் மைக்கேல் டானினோ நேற்று அளித்த பேட்டி: என்.சி.இ.ஆர்.டி., அமைப்பை ஆர்.எஸ்.எஸ்., இயக்குகிறது எனக் கூறுவது முட்டாள்தனம். பாடத்திட்டத்தை திருத்தும்படி, மத்திய அரசோ, பா.ஜ.,வோ அல்லது வேறெந்த அரசியல் கட்சி களோ எங்களை கட்டாயப் படுத்தவில்லை. பாடப்புத்தகங்களில் தங்களது மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த குறிப்புகள் இடம் பெற வேண்டும் என, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன. அவற்றை எங்களால் நிறைவேற்ற முடியாது. மாணவர்களுக்கு எது மிகவும் முக்கியமோ, அதை மட்டுமே செய்ய முடியும். திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களில், முடிந்தவரை வரலாற்றை நேர்மையாக காட்ட முயற்சித்துள்ளோம். அதை மிகைப்படுத்தியும் கூறவில்லை. என்ன நடந்ததோ அதை அப்படியே கூறியிருக்கிறோம். பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்களின் குறிப்புகள் நீக்கப்படவே இல்லை. அவை மறுசீரமைக்கப்பட்டுள்ளன. வரலாறு சுதந்திர போராட்ட வீரர்களை உள்ளடக்கிய கருப்பொருளின் ஒரு பகுதியாக, முகலாயர்களைக் காட்டியுள்ளோம். ஏனெனில், இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக முகலாயர்களை பிரிட்டிஷார் தோற்கடித்தனர் என, பலர் நம்பினர்; ஆனால், அது அப்படி இல்லை. பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு, பல இந்திய ஆட்சியாளர்கள் முகலாயர்களை எதிர்த்தனர் என்பது தான் வரலாறு. சமூக அறிவியல் பாடப்புத்தகங்களின் இரண்டாம் பகுதி, வரும் அக்டோபர் மாதத்திற்குள் தயாராகிவிடும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rathna
ஆக 29, 2025 12:08

நமது நாட்டின் மீது படை எடுத்து, மக்களை கொலை செய்து, கொள்ளை அடித்தவன் பற்றி 100 பக்க வரலாறு. பாரத பெண்களை குழந்தைகளை கடத்தி சென்று ஆப்கானிஸ்தான், அரேபியா பெண்கள் சந்தைகளில் விற்ற முகலாயர், நவாபுகள், கான்கள் பற்றி பல வகைகளில் பொய் வரலாறு. ராஜராஜ சோழன், ராஜேந்திரன், வர குண பாண்டியன், அன்னை மீனாட்சி, அரிமத்தன பாண்டியன், சேரன் செங்குட்டுவன், மராத்திய வீரன் சிவாஜி, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் அஸ்ஸாமின் வீரன் லசித் போர்ப்புகன் என்பவர்களை பற்றி ஒரு சில வரிகள் என்ன அவர்கள் பெயரே வரலாற்றில் இல்லை. பொய் வரலாறு இந்திய மக்களை தங்களது வரலாற்றை மறைக்க மறுக்க வேண்டுமென்றே எழுத பட்டது. இதற்கு காரணம் ஆண்ட கட்சிகள் தங்கள் வோட்டு வங்கிக்காக இந்திய வரலாற்றை மாற்றி எழுதியது தான். இது மிக பெரிய சதிதான்.


BALAJI
ஆக 29, 2025 11:12

இந்தியாவையே RSS தான் இயக்குது


பாலா
ஆக 29, 2025 09:44

தமிழக பாடநூல் கழகத்தை மிஷனரிகள் இயக்குவது என்னவோ உன்மை தான்.


VENKATASUBRAMANIAN
ஆக 29, 2025 08:02

திமுக கும்பல் விட்டால் கருணாநிதி சுதந்திரம் வாங்கி கொடுத்தார் என்று சொல்லுவார்கள். காங்கிரஸ் எப்படி இந்திரா ராஜீவ் வை தூக்கி பிடித்தது என்று எல்லோருக்கும் தெரியும். காங்கிரஸ் வரலாற்றை எப்படி திரித்தது என்றும் தெரியும்


தியாகு
ஆக 29, 2025 06:08

தமிழ்நாட்டை முன்னேற்றியது ரொம்ப நாளா ஒரு கும்பல் சொல்லிகிட்டு தெரியுது. இளம் தலைமுறையினரை நம்பவைக்கவும் செய்யுது. அதுக்கும் ஏதாவது வேட்டு வைங்க எஜமான்.


Thravisham
ஆக 29, 2025 08:41

திருட்டு குடும்ப ஊழல் கட்சியை பீரங்கி குண்டு வைத்துதான் தகர்க்கணும்


சமீபத்திய செய்தி