பிரசாரம் ஓய்ந்த நிலையில் இரவு முழுதும் மழை
புதுடில்லி:தலைநகர் டில்லியில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன் தினம் மாலை ஓய்ந்த நிலையில், இரவு முழுதும் லேசான மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை தொடர்ந்தது.வெப்பநிலை குறைந்த பட்சமாக 12.8 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இயல்பை விட 4.4 டிகிரிகள் அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 92 சதவீதமாக இருந்தது. காலை 9:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 249 ஆக பதிவாகியிருந்தது. இது, மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.அண்டை மாநிலமான ராஜஸ்தானிலும் தலைநகர் ஜெய்ப்பூர் உட்பட பல மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. அஜ்மீர் - 3.4, பசேரி - 2 மிமீ மழையும், பாகி - 1 மி.மீ மழை பதிவாகி இருந்தது.