உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தராமையா முதல்வரானதும் மழை போச்சு: பா.ஜ., ஆவேசம்

சித்தராமையா முதல்வரானதும் மழை போச்சு: பா.ஜ., ஆவேசம்

சாம்ராஜ்நகர்: ''சித்தராமையா முதல்வரான பின், மழை பொய்த்துவிட்டது. வறட்சி சூழ்ந்துள்ளது,'' என, பா.ஜ., விவசாய மோர்ச்சா தலைவர் பாட்டீல் நடஹள்ளி தெரிவித்தார்.சாம்ராஜ்நகரில் நேற்று அவர் கூறியதாவது:காங்கிரஸ் அரசு திவால் ஆகியுள்ளது. விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொள்கிறது. விவசாயிகளுக்கு அநியாயம் செய்துள்ளது. தற்போது குடிநீருக்கும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது.ஏரிகளை நிரப்ப, விவசாயிகளுக்கு விதைப்பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை.மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக வந்தவுடன், மழை கைவிட்டு விட்டது. கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லாமல், மக்கள் அவதிப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ