உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டு விவகாரத்தை பேச வைத்தவர் கடவுள்: சொல்கிறார் சந்திரபாபு நாயுடு!

திருப்பதி லட்டு விவகாரத்தை பேச வைத்தவர் கடவுள்: சொல்கிறார் சந்திரபாபு நாயுடு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: ''திருப்பதி லட்டு விவகாரம் குறித்து நான் பேச வேண்டும் என கடவுள் விரும்பினார்,'' என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு கூறியது அம்மாநில அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சந்திரபாபு குடும்பத்துடன் வந்து கோயிலில் சத்தியம் செய்ய தயாரா என கேள்வி எழுப்பி உள்ளது.இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: தனது லட்டு பிரசாதம் குறித்து நான் பேச வேண்டும் என கடவுள் விரும்பினார் என்று நான் நினைக்கிறேன். நாம் அனைவரும் வெறும் கருவிகள் தான். கடவுள் தான் அனைத்தையும் செய்கிறார். இது எனது ஆழமான நம்பிக்கை. டெண்டர் சீரமைப்பு என்ற பெயரில், எப்படி நெய்யின் தரத்தில் சமரசம் செய்ய முடியும். கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும், புனிதமான வழிபாட்டு முறையையும் நாம் உறுதி செய்ய வேண்டும். கோயிலுக்கு தரம் குறைந்த நெய்யை விநியோகித்தவர்கள் ஒருவரையும் விட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பல்லவி
செப் 23, 2024 20:13

Sydney கருத்து சூப்பர் Bengaluru கருத்து பத்து மார்க் நன்றி


venugopal s
செப் 22, 2024 19:00

ஓ, அந்த பயாலாஜிக்கல் முறையில் பிறக்காத மனித உருவில் வாழும் கடவுள் தான் செய்யச் சொன்னாரா? இப்படி பொசுக்கென்று உண்மையை போட்டு உடைத்து விட்டாரே!


அப்பாவி
செப் 22, 2024 18:37

அஞ்சு வருஷமா வாய் மூடிக்கிட்டிருந்தாரோ


Oviya Vijay
செப் 22, 2024 15:23

இது அந்த வெங்கடாஜலபதிக்கு தெரியுமோ ஓஓஓய்?


Baskaran
செப் 22, 2024 13:00

இது போன்ற நிகழ்வுகளில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வார்களே தவிர குற்றம் செய்தவர்களை மக்கள் அறிந்து கொள்ள முடியாது. குழப்பமே மிஞ்சும். கால ஓட்டத்தில் அனைவரும் மறந்து விடுவர். அல்லது மறக்கடிக்கப்படுவர்


Nava
செப் 22, 2024 12:48

ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுகிறோம் என்று உளர வேண்டாம் எந்த பின்புலமும் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் பிறந்து உலக தலைவர்களோடு சர்வசாதாரணமாக உரையாடுபவர் எங்கே எழுதி தந்ததை வாசிக்க முடியாமல் உளறும் தத்தி எங்கே?


V SUNDARESAN
செப் 22, 2024 12:31

ஆஹா கடவுள் என்ன பாடுபடுகிறார் இவர்கள் வாயில் ? பாவம்


V SUNDARESAN
செப் 22, 2024 12:27

ஆஹா கடவுள் என்ன பாடுபடுகிறார் ஏன் அரசியல் தலைவர்கள் வாயில். ஒருத்தர் நானே கடவுள் என்கிறார் எவர் கடவுள் சொன்னார் என்கிறார் .பாவம் kadavul


Chandran,Ooty
செப் 22, 2024 16:05

ஒருத்தர் மண்டையப் போட்டு மண்ணுக்குள்ள போயும் தயிர்வடை கேட்கிறார் இதையும் சேர்த்து சொல்லு..


Velan Iyengaar
செப் 22, 2024 12:22

ஜெகன் கேட்ட மாதிரி குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சத்தியம் செய்வாரா?? அதுக்கு பதில் சொல்லிவிட்டு கடவுள் அவரிடம் சொன்னதை நிரூபியுங்க ..... சேர்க்கை சரி இல்லை .... அதனால் தான் இந்த ரூட்டை எடுத்திருக்கிறார்


Ramesh Sargam
செப் 22, 2024 12:09

இனி ஜெகனுக்கு தூக்கத்திலும் அந்த உருண்டையான லட்டுதான் நினைவுக்கு வரும். வந்து தூக்கத்தை கெடுக்கும். கடவுளிடத்தில் விளையாடலாமா..?? இதுபோல தமிழகத்திலும் திமுகவின் எதிர்க்கட்சியினர் யாராவது ஒருவருக்கு கடவுள் கனவில் வந்து அந்த திமுகவினர் செய்யும் கோவில் அராஜகங்களை இதுபோல தட்டிகேட்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை