உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீர் தேர்தல்; 59% ஓட்டுப்பதிவு

ஜம்மு காஷ்மீர் தேர்தல்; 59% ஓட்டுப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஏழு மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில், இன்று (செப்.,18) நடந்த முதற்கட்ட ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்ததாகவும் 59 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பா.ஜ., மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனியாகவும் காங்., - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுவதால், மும்முனை போட்டி நிலவுகிறது. 90 சுயேச்சைகள் உட்பட 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம், 23.27 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f3db2kdn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஏழு மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில், இன்று (செப்.,18) முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. 3,276 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு அதிகாரிகள் கூறுகையில், இத்தேர்தலில் 59 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. அமைதியாக தேர்தல் நடந்தது. கிஷ்திவாரில் அதிகபட்சமாக 77 சதவீத ஓட்டுகளும், குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46 சதவீத ஓட்டுகளும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.2019ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அங்கு சட்டசபை தேர்தல் நடக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

அனைவரும் ஓட்டளியுங்கள்!

இது குறித்து, சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், 'ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். இன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரும் அதிக அளவில் ஓட்டளித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
செப் 18, 2024 13:33

பாராட்டுக்கள், மீண்டும் 1990 பிப்ரவரி மற்றும் மார்ச் இடையே 140,000 முதல் 160,000 பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஜம்மு, டெல்லி அல்லது நாட்டின் பிற பகுதிகளுக்குத் தப்பித்து செல்ல வைத்தனர் இந்த மாமன்னர் மற்றும் குறுநில மன்னர்களாட்சியில், மீண்டும் குறுநில மன்னர்கள் தேர்தலில் போட்டி , ஒரு புறம் பண்டிட்டுக்கள் மறுபுறம் பாதுகாப்பற்ற நிலையில் இராணுவ வீரர்கள், காரணம் இளைஞர் ஊர் ஒன்றுகூடி கல்லால் அடித்து துன்புறுத்தி ஓட ஓட விரட்டிய காட்சிகள் இன்னமும் யு டியூபில் உள்ளன, மக்களின் நல்லாட்சிக்கான ஒரு ஆட்சி அமைந்தால் பாராட்டலாம், வந்தே மாதரம்


சமீபத்திய செய்தி