உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா அருகே விபத்தில் சிக்கியது போர் விமானம்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய விமானி

ஹரியானா அருகே விபத்தில் சிக்கியது போர் விமானம்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய விமானி

பஞ்சகுலா: ஹரியானாவில், இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதுபற்றிய விவரம் வருமாறு; அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் போர் விமானம் பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் விமானம் பஞ்சகுலா பகுதியில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்து தீப்பிடிக்க, அதற்கு முன்னரே பாராசூட் மூலமாக விமானி வெளியே குதித்து உயிர்தப்பினார். விமான விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாக என்ன காரணம் என்பது பற்றிய எந்த விவரங்களையும் இந்திய விமானப்படை வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை