மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
சிக்கமகளூரு: சிறுமியை பலாத்காரம் செய்த, வாலிபரை தாக்கிய, ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.சிக்கமகளூரு ஆல்துார் கட்டிகண்டியில் வசிப்பவர் ருமன், 25. நடன ஆசிரியர். இவருக்கும், வேறு மதத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, சிறுமியை, ருமன் பலாத்காரம் செய்து உள்ளார். இதை வீடியோ எடுத்து உள்ளார்.அந்த வீடியோவை காண்பித்து, சிறுமியை மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமி, பெற்றோரிடம் கூறினார்.அவர்கள், ஒரு அமைப்பினரிடம் இதுகுறித்து கூறி உள்ளனர். மகளை லவ் ஜிகாத் செய்ய முயற்சி நடப்பதாகவும் கூறி இருந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் ருமனை பிடித்து, ஏழு பேர் தாக்கி உள்ளனர். படுகாயம் அடைந்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். நேற்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், ருமன் மீதும் 'போக்சோ' வழக்கு பதிவாகி உள்ளது. அவரது மொபைல் போனில், சிறுமியின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தன. அதை அழிக்க தடய அறிவியல் ஆய்வகத்திற்கு, மொபைல் போன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
1 hour(s) ago