உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செய்யாத குற்றத்திற்கு சிறையா? இழப்பீடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் குவியும் வழக்குகள்

செய்யாத குற்றத்திற்கு சிறையா? இழப்பீடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் குவியும் வழக்குகள்

விசாரணை நீதிமன்றங்கள் விதித்த மரண தண்டனையை ரத்து செய்து நிரபராதி என விடுவிக்கப்பட்டவர்கள், பல ஆண்டுகளாக அனுபவித்த சிறைவாசத்துக்கு இழப்பீடு தரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர். தமிழகத்தின் தேனி மாவட்டம் கம்பம் பகுதியின் சுருளி அருகே, கடந்த 2011ல் இரு கல்லுாரி மாணவர்களை கொலை செய்த வழக்கில் திவாகர் என்ற கட்ட வெள்ளை என்பவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், 2019ல் சென்னை உயர் நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இறுதியாக, திவாகர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இவ்வழக்கை விரிவாக விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலையில் திவாகருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது. அத்துடன் அவரை கொலை வழக்கில் இருந்தும் விடுதலை செய்தது. இதே போல, மஹாராஷ்டிராவில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக, 41 வயது நபருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. உத்தர பிரதேசத்தில், 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சஞ்சய் என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த மூன்று பேர் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 'குற்றம் இழைக்காமல் பல ஆண்டுகளாக அனுபவித்த சிறைவாசத்துக்கு இழப்பீடு தர வேண்டும்' என கோரியிருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்த விவகாரத்தில் எப்படி இழப்பீடு வழங்குவது என்பது குறித்து, மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி யோசனை தெரிவிக்க வேண்டும் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உதவ வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ajrjunan
அக் 29, 2025 12:28

தவறான சிகிச்சை அளித்த டாக்டருக்கு எதுவும் தண்டனை இல்லையா. அப்படி இருந்தால் அது நீதிபதிக்கும் பொருந்தும். நீதிதுறையிலும் வூழலுக்கு பஞ்சமில்லை போல தெரிகிறது.


ஆரூர் ரங்
அக் 29, 2025 11:27

எப்படியாவது வழக்கை முடித்து மெடல் வாங்க முயற்சிக்கின்றனர். மிரட்டியே ஒப்புதல் வாக்குமூலம் பெற்று தண்டனை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். குடும்பத்தின் ஆணிவேரை சிறையில் தள்ளி முழுக்குடும்பத்தையும் நடுத்தெருவில் விடுகின்றனர்.


Senior
அக் 29, 2025 10:28

ஒரு நிரபராதி இவ்வளவு காலம் சிறையில் இருந்து முழு வாழ்க்கையே தொலைத்து விட்டான், அவன் வாழ்க்கையை திருப்பி கொடுக்க முடியமா? இதுவே இவர்களுக்கு நடந்திருந்தால் எப்படி வேதனை அனுபவிப்பார்கள், நீதி கொடுக்கு முன் யோசிக்க வேண்டாமா?


Shekar
அக் 29, 2025 09:43

உச்ச நீதி மன்றத்திலே இருக்கிறவுக எல்லாம் இம்புட்டு நல்லவுகளா இருக்காங்களே.


D Natarajan
அக் 29, 2025 08:33

முதலில் தப்பான தீர்வு சொன்ன நீதிபதிகள் உடனே பதவி நீக்கப் படவேண்டும். பதவியில் இல்லை என்றால் பென்ஷன் முதல் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும். நிச்ச யமாக இழப்பீடு வழங்க வேண்டும். collegium முறையில் நீதிபதிகள் நியமிக்க படுவதை தடை செய்ய வேண்டும். இந்த பிஜேபி அரசு sensex ல் மூழ்கி உள்ளது. நீதித்துறையில் சீர்திருத்தம் மிக அவசியம். நடக்குமா


அப்பாவி
அக் 29, 2025 08:29

பெப்பே... இந்தியாவின் சாபக்கேடே சந்தேகத்தின் பேரில் எல்லாரையும் தூக்கி உள்ளே வெக்க வேண்டியது. எதைப் பேசணும்னாலும் ஸ்டேஷன்ல வந்து பேசிக்கோங்கன்னு சொல்ல வேண்டியது. துப்பு துலக்குறது, தண்டிக்கிறது ரெண்டும் மைனஸ். சந்தேக கேசில் ஜெயிலுக்கு போனவனெல்லாம் இன்னிக்கி பெயில்ல வந்து ராஜ்யசபா எம்.பி. வெட்கக்கேடு


Anantharaman
அக் 29, 2025 07:48

சமூக விரோதிகளுக்கு உச்ச நீதிமன்றம் எப்பொழுதும் கருணை காட்டுவது தவறு. இதைத் தடுக்க என்கெளன்டரில் அவர்களை போட்டுத் தள்ளிவிடுவதே நலம், பாதுகாப்பும்.


Ajrjunan
அக் 29, 2025 12:23

அப்போ உனக்குதான் முதல்ல.


Ramesh Sargam
அக் 29, 2025 07:03

செய்யாத குற்றத்திற்கு சிறை தண்டனை கொடுத்த நீதிபதிகள் உயிருடன் இருந்தால், அவர்களிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர இன்று உள்ள நீதிபதிகள் ஆணை பிறப்பிக்கவேண்டும். அவர்கள் ஒருவேளை உயிருடன் இல்லையென்றால், சம்பந்தப்பட்ட மாநில அரசோ, அல்லது மத்திய அரசோ அந்த இழப்பீட்டை கொடுக்கவேண்டும்.


Krishna
அக் 29, 2025 06:54

Compensate Heavily All FalseAccused Only from AntiPeople& AntiNation Case/News/Vote/Power Hungry VestedSelfSaint CriminalConspirator Gangs incl All their Assets. No Mercy Required


சுந்தர்
அக் 29, 2025 06:51

நீதிபதிகளே யோசனை செய்து நியாயமான தீர்ப்பை சொல்ல வேண்டியது தானே. கீழ் கோர்ட்டுகள் தவறுகளை எப்படி தண்டிக்க போகிறார்கள்? தவறான தீர்ப்பு சொன்னவங்க கிட்ட இருந்து இழப்பீடு பெற வேண்டும். சும்மா தவறான தீர்ப்புகளை சொல்லி தப்பிக்க கூடாது. அவர்களுக்கு Accountability வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே நீதித்துறை சிறந்து விளங்கும்.


புதிய வீடியோ