ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களில் யாருக்கு வெற்றி கிடைத்துள்ளது என்பது பற்றி விபரங்கள் வருமாறு:காஷ்மீரில், மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் களத்தில் இறங்கிய முக்கிய வேட்பாளர்களில் வெற்றி பெற்றது யார்? என்பது குறித்து பார்க்கலாம்.தாரிக் ஹமீத் (காங்கிரஸ்)
மத்திய ஷால்தெங் தொகுதியில் காங்கிரஸ் சார்பில்,போட்டியிட்ட முன்னாள் லோக்சபா எம்.பி.,யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தாரிக் ஹமீத் கர்ரா 14,395 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பா.ஜ., தலைவர்கள்
ஜம்மு காஷ்மீர் பா.ஜ., தலைவரான ரவீந்தர் ரெய்னா, நவுசேரா தொகுதியில் 7,819 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தேவேந்திர சிங்
நக்ரோடா தொகுதியில் போட்டியிட்ட காஷ்மீர், முக்கிய பா.ஜ., தலைவரான தேவேந்திர சிங் ராணா 30472 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.உமர் அப்துல்லா
முன்னாள் முதல்வரான இவர் பரூக் அப்துல்லாவின் மகன். இவர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ளார். இவர் கந்தர்பால் மற்றும் புட்காம் என 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.அதில், கந்தர்பால் தொகுதியில் 10,574 ஓட்டு வித்தியாசத்திலும்புட்காம் தொகுதியில் 18, 485 ஓட்டு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார். மெகபூபா மகள்
பிஜ்பெஹாரா சட்டசபை தொகுதியில், களமிறங்கிய மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி 9,770 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.