உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரசாந்த் கிஷோருக்கு இரு மாநிலங்களில் ஓட்டு; வெளியான புதிய தகவல்

பிரசாந்த் கிஷோருக்கு இரு மாநிலங்களில் ஓட்டு; வெளியான புதிய தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா; ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு இரு மாநிலங்களில் ஓட்டு இருக்கும் விவரம் வெளிவந்துள்ளது.பீஹார் சட்டசபை தேர்தல் நவ.6 மற்றும் நவ.11 என இருகட்டங்களாக நடக்க இருக்கிறது. ஓட்டுப்பதிவுக்கான காலம் வெகு குறைவாகவே உள்ளதால் முக்கிய கட்சிகள் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளன. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளையும், வாக்குறுதிகளையும், எதிரணி கூட்டணி மீது குற்றச்சாட்டுகளையும் கூறி பிரசாரம் செய்து வருகின்றனர்.ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி அல்லாது, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளது. பிரசாரத்திற்கு போகும் இடங்களில் எல்லாம், வாக்குறுதிகளை அவர் அள்ளி வீசி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந் நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு இரு மாநிலங்களில் ஓட்டுரிமை இருக்கும் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. ஒரு ஓட்டானது, மேற்கு வங்கத்தில் இருக்கிறது. எண் 121, கலிகாட் சாலை, பஹபானிபூர் என்ற முகவரியில் இந்த ஓட்டு உள்ளது. இந்த முகவரியில் தான் திரிணமுல் காங்கிரசின் அலுவலகமும் இருக்கிறது. பஹபானிபூர் தொகுதி முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியாகும்.மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2021ம் ஆண்டு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். அப்போது திரிணமுல் காங்கிரஸ் அலுவலக முகவரியை அடையாளமாக கொண்டு அவர் ஓட்டுரிமையை பெற்றுள்ளார். அவரின் ஓட்டுச்சாவடி ராணிஷங்கரி லேனில் உள்ள செயிண்ட் ஹெலன் பள்ளியாகும்.மற்றொரு ஓட்டானது, பீஹாரில் கர்காஹர் தொகுதியில் இருக்கிறது. இந்த தொகுதி சாசாரம் எம்பி தொகுதிக்குள் வருகிறது. அவரின் ஓட்டுச்சாவடி மத்ய வித்யாலாய, கோனார் கிராமம், ரோஹ்டாஸ் மாவட்டம் என்ற முகவரில் இருக்கிறது. இது தான் பிரசாந்த் கிஷோரின் பெற்றோரின் ஊராகும். பீஹாரில் அர்ராஹ் என்ற பகுதியில் தான் பிரசாந்த் கிஷோர் பிறந்தார்.ஒரு நபருக்கு இரு இடங்களில் ஓட்டுரிமை இருப்பது எப்படி என்ற கேள்வியை பலரும் எழுப்பி இருக்கின்றனர். இதுகுறித்து அவரது கட்சி நிர்வாகி தரப்பில் கூறுகையில், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் தமது பெயரை அவர் சேர்த்துள்ளார். அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்க உரிய விண்ணப்பத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.1950ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 17ன் படி சட்டப்படி வாக்காளராக தகுதிபெற்ற எவர் ஒருவரும், இரு இடங்களில் ஓட்டுரிமையை வைத்திருக்கக்கூடாது. பிரிவு 18ன் படி, ஒரு வாக்காளர் ஒரே தொகுதியில், இரு இடங்களில் தமது ஓட்டை பதிவு செய்து வைத்திருக்கக்கூடாது. ஒரு வேளை இருப்பிடத்தை மாற்றினால் கட்டாயம் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்து அதை சரி செய்திருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

duruvasar
அக் 28, 2025 22:25

கோபிலபுர லிஸ்டில் பெயர் இருக்கிறது என பாரக்கவும்


ஜெய்ஹிந்த்புரம்
அக் 28, 2025 21:55

His first major political campaign was in 2011 to help Narendra Modi, then Chief Minister of Gujarat get re-elected to the CM Office for a third time. இப்போ சொல்லுங்க. சங்கீதத்தை எங்கே இருந்து ஆரம்பிக்கலாம்?


D Natarajan
அக் 28, 2025 21:47

வோட்டர் ID ஆதார் என்னுடன் இணைப்பது கட்டாயமாக்க வேண்டும். பாஸ்போர்ட் ம் ஆதரவுடன் இணைக்க வேண்டும். வோட்டர் லிஸ்ட் ஆல் இந்தியா லெவெலில் ஒன்றாக்க வேண்டும். ஒரு நாடு ஒரு வோட்டர் id . நிறைய சீர்திருத்தங்கள் தேவை.


Murthy
அக் 28, 2025 19:45

சென்னை அறிவாலய முகவரியில் இன்னொரு ஒட்டு இருக்கும் ....


Narayanan Muthu
அக் 28, 2025 19:39

வோட்டர் ID ஐ ஆதாருடன் இணைப்பதை கட்டாயப்படுத்தவேண்டும். ஆதார் இல்லையேல் வோட்டளிக்கும் உரிமை கிடையாது என திருத்தம் கொண்டுவந்தால் இது போன்ற குழப்பங்கள் தவிர்க்கலாம். நம் தேர்தல் ஆணையம் எஜமானின் வெற்றிக்கு எப்படி எல்லாம் மோசடியாக உதவலாம் என்று அத்தனை தில்லாலங்கடி வேலையை செய்கின்றதே தவிர வேறொன்றும் உருப்படியாக செய்வதில்லை.


Field Marshal
அக் 28, 2025 19:59

அந்தந்த மாநில பள்ளி ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும் தான் வாக்காளர் சம்மந்தப்பட்ட வேலைகளை செய்கிறார்கள் .200 க்காக கண்டபடி உருட்டலாமா ?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 28, 2025 21:47

அப்போ ஒரு ஆளுக்கு ஒரு ஆதார் மட்டுமே இருக்குன்னு இன்னும் நம்புறீங்க, அப்படித் தானே?


kumaran
அக் 28, 2025 19:07

இவரால் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் சில கட்சிகள் வளர்ச்சிக்கு எதிராகவும் ஊழலை மையப்படுத்தி ஆட்சி செய்கிறது என்பது தெரிந்தும் அவர்களுக்கு வெற்றிக்கான வியூகம் என்ற பெயரில் மக்களை பற்றி கவலை படாமல் பணத்திற்காக உழைத்தவர் இவரது கட்சியும் கொள்கையும் எப்படி இருக்கும்.


Balasubramanian
அக் 28, 2025 18:58

தேர்தல் வியூக நிபுணர்! செய்தால் சரிதான்! ரூ 200 கோடி வாங்கி கொண்டு வியூகம் வகுத்தால் இப்படித் தான் இடக்குமடக்காக யோசனை தோன்றும்


Rajarajan
அக் 28, 2025 18:24

அரசியல்வாதி ஆனால், எல்லாமே ரெண்டு அல்லது அதற்க்கு மேல தான் வெச்சிப்பாங்க போல. இவற்றை மைண்டைன் பண்ணத்தான் அரசியலில் அளவுக்கு மீறி சம்பாதிக்கின்றனரோ ?? நான் சிம் கார்டு சொன்னேன்.


Perumal Pillai
அக் 28, 2025 18:07

EC is a good for nothing organization. Once jayalalitha filed nomination at four different constituencies but the useless EC never dared to take action against her and shamelessly ran away from the scence with its tails tugged between the hind legs.


RAMESH KUMAR R V
அக் 28, 2025 18:05

இது போன்ற தவறுகளுக்கு குற்றவாளிக்கு அபராதம் மற்றும் கடும் தண்டனை வழங்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை