உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெயலலிதா உருவ சிலை பெங்களூரில் இன்று திறப்பு

ஜெயலலிதா உருவ சிலை பெங்களூரில் இன்று திறப்பு

பெங்களூரு : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை, பெங்களூரில் இன்று திறக்கப்படுகிறது.இதுதொடர்பாக கர்நாடகா மாநில அ.தி.மு.க., செயலர் எஸ்.டி.குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் சிலையை, பெங்களூரு கலாசிபாளையத்தில் உள்ள ராஜகோபால் கார்டனில் இன்று காலை 9:30 மணிக்கு, அ.தி.மு.க., மாநில செயலர் எஸ்.டி.குமார் திறந்து வைக்கிறார்.பின், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியின் ஆணைக்கிணங்க, ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டம் நடக்கிறது. சேகர் தலைமை வகிக்கிறார். தேவராஜ், முனியன், முத்து, நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஏழுமலை வரவேற்கிறார்; டாக்டர் சமரசம் சிறப்புரை ஆற்றுகிறார்.தலைமை கழக பேச்சாளர் ஏழுமலை, மாநில செயலர் எஸ்.டி.குமார் நன்றி கூறுகின்றனர். மாநில பொதுக்குழு, மாவட்டம், தொகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்